Saturday, July 10, 2010

இந்தியாவின் கதை சொல்லும் பாராளுமன்ற அருங்காட்சியகம்

கே. அசோக்குமார்
அசோக சக்கரவர்த்தியின் புதல்வர் மஹிந்தன் இலங்கைக்கு வந்ததன் பின்னர் அவரது சகோதரி சங்கமித்தை வெள்ளரசக் கிளையுடன் இலங்கைக்கு வந்தார்.
இதனை சித்தரிக்கும் விதத்திலான உருவச் சிலைகள் தான் இந்திய பாராளுமன்ற அருங்காட்சியகத்துக்குள் நுழையும் போது எம்மை வரவேற்கிறது. இந்தியாவில் புத்தமதம் பரவலாக பின்பற்றப்படும் மதமாக இல்லாவிட்டாலும் கூட புத்த மதத்தை மிக கெளரவிக்கும் நாடாக இந்தியா விளங்கி வருகிறது.
உண்மையிலேயே மனிதர்கள் நிற்பது போன்று செதுக்கப்பட்ட சிலைகள், கரையில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ள கட்டுமரக் கப்பல் நோக்கி பயணிக்கும் சங்கமித்தையும் குழுவினரும் எமக்கு விளக்கமளிக்கும் அருங்காட்சியகத்திலுள்ள பெண் எம்மைக் கண்டதும் இரட்டிப்பு மகிழ்ச்சியாக காணப்பட்டார்.
‘இலங்கைக்கான இந்தியாவின் முதல் சமாதான முன்னெடுப்பு சங்கமித்தை வெள்ளரசுக் கிளையை அங்கே எடுத்துச் சென்றதன் மூலம் ஆரம்பமானது’ என கூறிய அந்தப் பெண் இலங்கையரான எமக்கே இதனை கூறுவதற்கு கிடைத்த சந்தர்ப்பம் எனக் கூறி மகிழ்ந்தார்
அசோக சக்கரவர்த்தியின் கல்வெட்டுக்களை உணர்த்தும் வகையில் அவையும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
சங்கமித்தை இலங்கைக்கு வெள்ளரசுக் கிளையுடன் வந்த இடம் இன்று காங்கேசன்துறையில் சேத்தான் குளம் பகுதியில் அமைந்துள்ளது. இன்று ‘தம்பதொல பட்டுன’ என அழைக்கப்படுகின்ற இப்பகுதியில் சங்கமித்தை வெள்ளரசுக் கிளையுடன் வந்திறங்கியதை நினைவு கூரும் வகையில் அண்மையில் ஜனாதிபதி யின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ சங்கமித்தையின் உருவச் சிலையை பிரதிஷ்டை செய்து வைத்தார் என்பது நினைவிருக்கலாம்.
இந்தியா சுதந்திரமடைவதற்கு உருதுணையாக இருந்த சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறு அனைத்தும் திரையில் காண்பிக்கப்படுகிறது. நவீன தொழில்நுட்பத் திறனுடன் கூடிய அரைவட்ட வடிவில் ‘பனரோமா’ டிஜிடல் திரை அமைந்திருக்கும் ஒரு மினி தியேட்டரில் ‘சரொண்டிங்’ முறையிலான ஒலி அமைப்புடன் அவர்கள் திரையில் காட்டிய ஒலி அமைப்புடன் அவர்கள் திரையரங்கில் காட்டிய விவர்ண சித்திரம் அந்தக் காலத்துக்கே எம்மை அழைத்துச் சென்றது. 1940களுக்கு நாமும் செல்வது போன்ற உணர்வு ஏற்பட்டதுடன் சுதந்திர போராட்டத்திற்காக எந்தளவுக்கு தம்மை இந்தியர்கள் அர்ப்பணித்திருக்கிறார்கள் என்பதையும் உணர்ந்து மெய்சிலிர்த்தோம்.
சுமார் 20 x 10 அளவிலான அறை. அறையின் ஒரு பக்கம் வெண்திரை. காட்சி ஆரம்பமானதும் திரையின் நடுவே மகாத்மா காந்தி தமது பேத்திமாருடன் சகிதம் வந்து கொண்டிருக்க இருபுறமும் மக்கள் ‘ரகுபதிராகவ ராஜாராம்’ என்ற பாடலை இசைத்த வண்ணம் நின்று கொண்டிருப்பது காண்பிக்கப்படுகிறது.
நாம் நின்று கொண்டிருக்கும் அறையில் நாமும் திரையின் இருமருங்கிலும் நின்றவாறு திரையை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறும் போது மகாத்மா காந்தி எம்மை நோக்கி வந்து எம்மை கடந்து செல்வது போன்ற உணர்வு ஏற்படுகிறது. அந்த அளவுக்கு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
1947 ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி நள்ளிரவு இந்தியா சுதந்திரம் அடைந்ததை அறிவிக்கும் வகையில் பாரதஜோதி ஜவஹர்லால் நேரு அறிவித்து உரையாற்றுவதை அணிமேஷன் முறையில் செய்து காண்பித்திருக்கிறார்கள்.
இந்திய பாராளுமன்றத்தின் லோக்சபா மண்டபம் போன்று அமைக்கப்பட்ட அறை. சபாநாயகர் ஆசனத்தில் ஒருவர் அமர்ந்திருக்க பாராளுமன்ற உறுப்பினர்களும் அவரவர் ஆசனங்களில் அமர்ந்திருக் கும் படியான சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
பிரதமர் ஜவஹர்லால் நேரு உரையாற்றுவதற்கு ஒலிவாங்கிக்கு முன்னால் நின்று கொண்டிருப்பது போன்று பிரதமரின் சிலையும் வைக்கப்பட்டுள்ளது.
மாதிரி லோக் சபாவுக்குள் எம்மை அழைத்துச் சென்று சிலைகளாக அமர்ந்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் பக்கத்திலும் எம்மை அமரச் செய்தார்கள்.
மின் விளக்குகளின் வெளிச்சம் படிப்படியாக குறைய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் உருவத்துக்கு மட்டும் அதிக ஒளிபாயும் விதத்தில் மின் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. நாம் அமர்ந்திருந்த பகுதி இருட்டாக இருந்தது.
திடீரென பண்டிட் ஜவஹர்லால் நேரு தலையை உயர்த்தி எம்மை பார்க்கிறார். தலையை அங்கும் இங்குமாக அசைத்து அமர்ந்திருக்கும் உறுப்பினர்களை யும் எம்மையும் நோக்கி பார்ப்பதுடன் கண்களைச் சிமிட்டியபடி சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்திருந் துள்ளவரையும் ஒருமுறை பார்த்துவிட்டு, அவரது மேசையின் மீதுள்ள காகிதத்தை பார்த்தபடி இந்தியா சுதந்திரமடைந்து விட்டது என்ற உரையை ஆரம்பிக்கிறார்.
"Awake to freedom" long years ago We mae a tryst with destiny, and now The times come when we shall redeem our pledge, not wholly or in full measure, but very substantially ... என ஆரம்பிக்கும் உரை நேருவின் குரலிலேயே ஒலிக்கிறது.
சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்துள்ளவரும் அடிக்கடி உரையாற்றிக் கொண்டிருக்கும் பிரதமர் ஜவஹர்லால் நேருவை பார்ப்பதும் எம்மைப் பார்ப்பதுமாக இருந்தார்.
இதில் வியந்து போயிருந்த நாம் இருட்டில் எம்மோடு எமது அருகில் சிலைகளாக அமர்ந்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களை மெதுவாக ஓரக்கண்ணால் பார்க்கத் தவறவில்லை. இந்தச் சிலைகளினதும் அசைவுகள் தென்படுகின்றனவா? என்ற சந்தேகம்தான். ஒருபுறம் பயமாகவும் இருந்தது.
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமின் சிந்தனையில் உதித்த இந்த பாராளுமன்ற அருங்காட்சியகம் எல்லோரையும் வியக்கவைக்கிறது. புதுடில்லி செல்லும் அனைவரும் கட்டாயமாக பார்க்க வேண்டிய இடம் என்பதுதான் உண்மை. சுதந்திர போராட்டக் காலம்.
வெள்ளையர்களை எதிர்த்துப் போராடிய போராட்டங்கள், சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோஷ் தலைமையிலான படையெடுப்பு, வெள்ளையர்களால் மக்கள் விரட்டியடிக்கப்படுவதும், சுடப்படுவதுமான ஜாலியன்வாலாபாக் மாதிரியான சாட்சிகள் திரையில் காண்பிக்கப்படும் ‘@!ஜி இந்திய நாட்டின் மீது பரந்துள்ள ஒவ்வொரு இந்தியப் பிரஜையும் நிச்சயம் உணர்ச்சி மேலீட்டினால் மெய் சிலிர்த்துப் போவார்கள் என்பது நிச்சயம்.
இவை அனைத்தையும் தொகுப்பதற்கே நெடுநாள் ஆகியிருக்கலாம். இதனைச் சாதிக்க உழைத்தவர் அனைவரையும நன்றியுடன் நினைவு கூர வேண்டும்.
அவ்வாறான ஒரு பாராளுமன்ற நூலகம் எமது நாட்டிலும் அமைக்கப்படத்தான் வேண்டும். இந்தியாவில் நடைபெற்றதைப் போல் சுதந்திரப் போராட்டங்கள் இலங்கையில் நடைபெறாவிட்டாலும் குறிப்பிட்டுச் சொல்லும்படியான போராட்டங்கள் இங்கேயும் நிகழ்ந்துள்ளன. சமசமாஜிகள் போராடி இந்தியாவுக்கு தப்பியும் சென்றனர். இவற்றை தொகுத்து ஒளி - ஒலி காட்சிகளாக எமது மாணவர்களுக்கும் காட்டலாம். இது அவர்கள் மத்தியில் தேசப்பற்றை வளர்க்கும்.
எமது நாட்டில் பாராளுமன்ற அமர்வுகள் நடைபெறும் தினங்களில் சபை நடவடிக்கைகளைக்கான பெருந்திரளான மாணவர்கள் வருகிறார்கள். ஆனால் அவர்கள் அங்கு வந்து கற்றுக் கொடுப்பதற்கு என்ன இருக்கிறது. இந்திய பாராளுமன்ற அருங்காட்சியகத்தைப் பார்த்த பின்னர் எமது நாட்டிலும் பாராளுமன்ற அருங்காட்சியகம் ஒன்றை அமைப்பதன் அவசியத்தை வெகுவாக உணர்ந்தோம். இக்கோரிக்கை எமது சபாநாயகருக்கு சமர்ப்பணம்.
இந்திய பாராளுமன்ற அருங்காட்சியகத்துள் சென்று வெளியேவரும் ஒவ்வொருவருக்கும் ‘நான் இங்கே சென்றிருந்தேன்’ எனக் கூறிக் கொள்வதற்காக நினைவுச் சின்னங்களையும் அங்கே விலை கொடுத்து வாங்க முடியும். இந்திய பாராளுமன்ற அருங்காட்சியக சின்னம் பொறிக்கப்பட்ட பர்ஸ¤கள், கீ டெக்குகள், டேபிள் வெளிட்டுகள், பேனாக்கள், கடிகாரங்கள் உட்பட விலையுயர்ந்த பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன. அருங்காட்சியகத்தை முழுமையாக சுற்றிப் பார்ப்பதற்கு எமக்கு வழங்கப்பட்டிருந்த நேரம் போதுமானதாக இருக்கவில்லை. அன்று மதியம் இந்திய வெளியுறவு அமைச்சினால் தாஜ் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதிய போசன விருந்தில் கலந்து கொள்வதற்கு செல்ல வேண்டியிருந்தது. தொடரும

No comments:

Post a Comment