Saturday, July 10, 2010

இந்திய பாராளுமன்ற அமர்வுகளை அச்சொட்டாக ஒளி பரப்பும் லோக்சபா டி.வி

எமது நாட்டில் பாராளுமன்ற அமர்வுகளின் போது காரசாரமான விவாதங்கள் நடைபெறுவதுண்டு. மிகவும் சுவாரசியமான நிகழ்வுகளை மட்டும் செய்தி ஒளிபரப்புக்களின் போது காணலாம்.
செய்தியாளர்களுக்கான கலரியில் அமர்ந்து நேரடியாக நாம் பார்க்கும் சபை அமர்வுகளை தொலைக்காட்சியில் அனைவரும் பார்க்க முடியாது. குறிப்பிட்ட சில விவாதங்களை மட்டும் செய்தி ஒளிப்பரப்புக்களின் போது பார்க்கக்கூடியதாக இருக்கிறது.
வரவு-செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும் போது மட்டும் நேரடி ஒளிபரப்புகள் செய்யப்படுவதைக் கண்டிருக்கிறோம். ஒவ்வொரு நாளும் பாராளுமன்ற அமர்வுகள் முடிவடைந்த பின்னர் ஒலி / ஒளிப்பதிவு பிரிவினரால் இலத்திரனியல் ஊடகங்களுக்கு இறுவெட்டுக்களை பெற்றுக்கொடுப்பார்கள். இதனை பயன்படுத்தியே செய்திகளை ஒளிபரப்புகிறார்கள். ஆனால் இவை முழுமையாக ரினீit செய்யப்பட்ட இறுவெட்டுக்களாகத்தான் இருக்கும்.
ஆனால் இந்த நிலைமை இந்திய பாராளுமன்றத்தில் இல்லை. லோக்சபா ரி.வி.யினூடாக சகல அமர்வுகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இலங்கையிலிருந்து புதுடில்லி சென்ற பாராளுமன்ற ஊடகவியலாளர் சங்கத்தின் பிரதிநிதிகளான எமக்கு லோக்சபா ரி.வி.யின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் சுனீத் டெண்டன் என்பவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
லோக்சபா செயலகத்திலுள்ள குழு அறை ஒன்றில் இச்சந்திப்பு நடைபெற்றது.
இந்திய தேசிய தொலைக்காட்சியான தூர்தர்ஷனின் இணை அலைவரிசையாக ஆரம்பிக்கப்பட்ட லோக்சபா ரி.வி. இன்று தனியே இயங்கக்கூடிய அலைவரிசையாக இருக்கிறது.
1989 ஆம் ஆண்டு ஜனாதிபதியின் உரையை முதன் முதலாக லோக்சபாவிலிருந்து தூர்தர்ஷன் தொலைக்காட்சி நேரடி ஒளிப்பரப்பை செய்தது.
மக்களால் தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்றம் செல்லும் தமது பிரதிநிதிகள் சபையில் எமக்காக என்ன செய்கிறார்கள், எமக்காக என்ன பேசுகிறார்கள் என்பதை அறியும் உரிமையும், ஆவலும் மக்களுக்கு இருக்கிறது. என

சபையினர் நடவடிக்கைகளை தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிப்பரப்ப வேண்டும் என்ற ஆலோசனையை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜீ முன்வைத்திருந்தார். அதுவரை தூர்தர்ஷன் தொலைக்காட்சி, லோக்சபா, ராஜ்ய சபா அமர்வுகளை ஒளிப்பரப்பியது.
2006 ஜூலை மாதம் இந்திய பாராளுமன்றத்தின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் விதத்தில் லோக்சபா ரி.வி. 24 மணிநேரம் ஒளிபரப்பை ஆரம்பித்தது.
lookchapaavinul yettu வீடியோ கமராக்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. சபாநாயகரின் ஆசனத்தை நோக்கிய கமரா எந்நேரமும் இயங்கிக் கொண்டிருக்க ஏனையவை சபையினுள் பேசும் உறுப்பினர்களை நோக்கியதாக இருக்கும். இவற்றின் முழுமையான கண்ரோல்ரூம் லோக்சபா செயலகத்தினுள்ளேயே இயங்குகிறது.
லோக்சபா ரி.வி.யின் ஆரம்பம் முதல் இன்றைய நிலைவரை எமக்கு அதன் நிறைவேற்று பணிப்பாளர் சுனீத் டெண்டன் விளக்கிக் கூறினார்.
லோக்சபா ரி.வி. ஸ்ரூடியோவுக்குள் நேர்காணல்கள், விவாதங்கள், சந்திப்புகள், போன்றவற்றை ஒளிப்பதிவு செய்வதற்கான நவீன தொழில்நுட்பங்களிலான உபகரணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஸ்ரூடியோவுக்குள் ஒளிப்பதிவு நடைபெறும் போது வெளியில் கண்ரோல் ரூமுக்குள் இருந்தவாறே கமராக்களை இயக்கவும், லைட்டிங் செய்யும் வசதியும் உண்டு. முதல்முறையாக ‘ரோபோட்டிக்’ கமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன. லோக்சபா ஸ்ரூடியோவுக்குள் சென்று பார்க்கவும் அங்குள்ள தொழில்நுட்பக் கலைஞர்களுடன் உரையாடவும் சந்தர்ப்பம் கிடைத்தது.
இலங்கையிலிருந்து வந்துள்ள பாராளுமன்ற ஊடகவியலாளர்கள் என்றதும் எமக்கு நல்ல வரவேற்பும், மரியாதையும் கிடைத்தது.
செய்மதியினூடாக ஒளிப்பரப்பாகும் இத்தொலைக்காட்சி சேவை பாராளுமன்ற வளவுக்குள் பொருத்தப்பட்டுள்ள அதி சக்தி வாய்ந்த பாரிய டிஸ் அண்டனாவினூடாக தொடர்பேற்றம் ஸிஜிவியிணிறி செய்யப்படுகின்றது. டிஷ் ரி.வி. மூலமாக தொலைக்காட்சி பார்ப்பவர்களுக்கு இலவசமாக லோக்சபா ரி.வி. அலைவரிசையை பார்க்கமுடியும்.
தற்போது லோக்சபா ரி.வி.யின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக இருக்கும் சுனித் டெண்டன், தூர்தர்ஷன் ரி.வி.யின் நடப்பு விவகாரங்களுக்கு பொறுப்பான பொதுமுகாமையாளராக கடமையாற்றியுள்ளார். இந்திய சினிமா அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் முக்கிய பொறுப்பாளராகவும் இருந்துள்ளார். இந்திய பாராளுமன்றத்தின் பின்னணியைக் கொண்ட பேனர்கள் தயாரிப்பதிலும், கிராபிக்ஸ் டிசைன்கள் செய்வதில் விற்பன்னர்களும் தனித்தனியே செயற்பட்டுக் கொண்டிருப்பதையும் லோக்சபா ரி.வி. அலுவலகத்தில் காணக்கூடியதாக இருந்தது.
இலங்கை பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் உரையாற்றும் போது ஏனைய உறுப்பினர்களுக்காகவும், பத்திரிகையாளர் கலரி மற்றும் சபாநாயகரின் கலரியிலுள்ளவர்களுக்காகவும் சமகாலத்தில் ஏனைய மொழிகளில் உரைபெயர்ப்பு செய்யப்படும்.
குறிப்பாக உறுப்பினர் ஒருவர் ஆங்கிலத்தில் உரையாற்றினால் தமிழிலும், சிங்களத்திலும் உரைபெயர்ப்பு நடைபெறும் எமக்கு தேவையான மொழியை தெரிவு செய்து ஹெட்போன் ஊடாக செவிமடுக்கலாம். இலங்கையில் சபை உறுப்பினர்கள் ஆங்கிலம், தமிழ், சிங்களம் ஆகிய தமக்கு விரும்பிய மொழியில் உரையாற்றுவார்கள். உறுப்பினர் ஒருவர் என்ன மொழியில் உரையாற்றுகிறாரோ அதே மொழியில் (நேரடியாக) செவிமடுத்தாலேயே ஏனைய உறுப்பினர்கள் குறுக்கீடு செய்தல், பதிலளித்தல், மற்றும் சில சுவாரஷ்யமான உரையாடல்களையும் செவிமடுக்கலாம்.
இந்தியாவில் சுமார் 13 மொழிகளுக்கு மேல் பேசப்படுகிறது. அனைத்து மாநிலங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் லோக்சபா ராஜ்ய சபாவிலும் அங்கம் வகிக்கின்றனர். இவர்கள் எந்த மொழியில் பாராளுமன்றத்தினுள் உரையாற்றினாலும் ஆங்கிலம், அல்லது ஹிந்தி மொழியில் மட்டுமே உரைபெயர்ப்பு செய்யப்படும்.
ஆங்கிலத்தில் ஒருவர் பேசுவார் எனின் ஹிந்தி மொழியின் உரை பெயர்ப்பு செய்யப்படும். ஹிந்தியில் பேசினால் ஆங்கிலத்தில் உரைபெயர்ப்பு செய்யப்படும்.
இவ்விரண்டு மொழியைத்தவிர தமிழ் அல்லது வேறு மொழியில் சபையில் உரையாற்றப் போகிறார் எனின் முன்கூட்டியே சபாநாயகருக்கு அறியத்தர வேண்டும். அப்போது தான் அவருக்காக உரைபெயர்ப்பாளர் ஒருவரை நியமிப்பார்கள். அறிவித்தால் மட்டுமே தான் விரும்பிய மொழியில் உரையாற்றலாம்.
லோக்சபா ரி.வி.யின் உரைபெயர்ப்பு செய்யப்பட மாட்டாது. அத்துடன் சப்டைட்டில்களும் கிடையாது. சபையில் உறுப்பினர் என்ன மொழியில் பேசுகிறாரோ அதேமொழியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. சபாநாயகரின் ஆசனத்தில் யார் அமர்ந்து சபையை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்களோ அவரது பெயர் சப்டைட்டிலாக காண்பிக்கப்படும்.
சபையில் உறுப்பினர் ஒருவர் பேசுவது சிறப்புரிமை மீறல் என இன்னொருவரினால் சுட்டிக்காண்பிக்கப்பட்டு அதனை ஹன்சாட்டில் பதிவாக இடமளிக்க வேண்டாம் என சபாநாயகர் அறிவித்தால் அதனை ஊடகங்களும் பிரசுரிக்கவோ, ஒளி/ஒலி பரப்பவோ முடியாது. லோக்சபா ரி.வி நேரடி ஒளிபரப்பின் போது இதனை எவ்வாறு கையாள்கிறது என சுனீத் டெண்டனிடம் கேட்டோம்.
லோக்சபா ரி.வி.யில் நேரடியாக இது ஒளிபரப்பு செய்யப்படும். ஊடகங்களில் ஒளி/ஒலி பரப்பவோ பிரசுரிக்கப்படவோ கூடாது என சபாநாயகர் அறிவித்தல் விடுத்தாலும் லோக்சபா ரி.வி. நேரடி ஒளிப்பரப்பில் காண்பிக்கப்படும். லோக்சபா ரி.வி. நேரடி ஒளிபரப்பிலும் காண்பிக்கக் கூடாது என சபாநாயகர் எண்ணினால் அவரது மேசைக்கு மேலுள்ள சுவிட்சை அழுத்துவார். உடனடியாக கட்டுப்பாட்டறையிலுள்ளவர் ஒளிபரப்பை தடைசெய்துவிடுவார் என்றார்.
இவ்வாறு எப்போதாவது நடைபெற்றதுண்டா? எனக் கேட்டோம்.
2006 ஜுலை மாதம் லோக்சபா ரி.வி. இந்திய பாராளுமன்றத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட நாள்முதல் இன்றுவரை ஒரே ஒரு தடவை மட்டுமே இவ்வாறு நடைபெற்றுள்ளது எனக் குறிப்பிட்டார்.
லோக்சபாவுக்குள் பொருத்தப்பட்டுள்ள தானியங்கிக் கமராக்கள் (ரொபோட்டிக் கமராக்கள்) ஊடாக வரும் ஒளி அலைகள் கட்டுப்பாட்டறையில் விரிந்து கிடக்கும் 10 க்கும் மேற்பட்ட திரைகளில் தென்படுகிறது.
சபை நடவடிக்கைகள் நடைபெறும் போது சபாநாயகர் எந்நேரத்திலும் தேவையேற்படின் ஒளிபரப்பை தடைசெய்வதற்காக ‘பஞ்ச்’ செய்யலாம் என்ற எதிர்பார்ப்பில் கட்டுப்பாட்டறையினுள் தொழில்நுட்பக் கலைஞர்கள் உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருப்பார்கள். நேரடி ஒளிபரப்பு என்பது மிகவும் ‘ரிஸ்க்’கான வேலை என்பதை கட்டுப்பாட்டறைக்குச் சென்று பார்த்தபோது உணர்ந்து கொண்டோம்.
அதுமட்டுமல்ல, ஒளிபரப்பப்படும் ஒளிப்பதிவுகள் அனைத்தும் இறுவெட்டுக்களாக ஆவணப்படுத்தப்படுகின்றன. ஆவணப்படுத்தலின் போது ஹன்சாட்டில் பிரசுரிக்கவோ, ஊடகங்களினூடாக வெளியிடவோ கூடாது என சபாநாயகரினால் ‘பஞ்ச்’ செய்யப்பட்ட பகுதி ஒளிப்பதிவிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு அவை வேறாக ஆவணப்படுத்தப்படுகிறது.
லோக்சபா ரி.வி. இலாப நோக்கம் கொண்ட அலைவரிசை அல்ல. இதை சுனீத் டெண்டன் "We are not a Business Model Oriented வர்த்தக மயப்படுத்தப்பட்ட அலைவரிசை அல்ல) எனக் குறிப்பிட்டார். ஏனைய அலைவரிசைகள் போன்று வர்த்தக ரீதியாக போட்டி போட்டால் லோக்சபா ரி.வி. இந்தியாவின் முதல்தர அலைவரிசையாக ஆக்கிவிடலாம். அது எங்கள் நோக்கமல்ல. வருடாந்தம் இதற்கென பெருந்தொகை பணமும் ஒதுக்கப்படுகிறது. Lok Sabha T.V not a News Channel, I t’s a View channel கூறிய அவர், எங்களிடமிருந்து விடைபெற்றார்.
அன்று இரவு எமக்கு புதுடில்லியிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் உதவி இலங்கைத் தூதுவர் பாலித கனேகொடவின் இல்லத்தில் விரு ந்துபசாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து சப்பாத்தி, பூரி, பராட்டா எனச் சாப்பிட்டு நாக்குச் செத்துப் போயிருந்த எமக்கு இது இனிப்பான செய்தியாக இருந்தது. (தொடரும்)

No comments:

Post a Comment