Saturday, July 10, 2010

பாராளுமன்ற ஊடகத்துறையை கையாளும்
ஊடக ஆலோசனைச் சபை

(கே. அசோக்குமார்)
பாராளுமன்ற அமர்வுகளை செய்தி நிறுவனங்க ளுக்காக, பத்திரிகை நிறுவனங்களிலிருந்தும், இலத்திர னியல் ஊடக நிறுவனங்களிலிருந் தும் செய்தி சேகரிப்புக்காக செல்லும் ஊடகவியலாளர் களுக்கு பாராளுமன்றத்தினால் விசேட அனுமதி அட்டை யொன்று வழங்கப்படுகிறது.
அச்சு ஊடகங்கள், இலத்திரனியல் ஊடகங்கள் என ஒவ்வொரு நிறுவனத்துக்கும் அந்த நிறுவனத் தின் பெயர் குறிப்பிடப்பட்டு மூன்று அல்லது இரண்டு விசேட அனுமதி அட்டைகள் வழங்கப்படுவதுண்டு.
நிறுவனங்கள் தமது நிறுவனத்திலுள்ள ஊடகவிய லாளர் ஒருவரை அல்லது இருவரை, அல்லது மூவரை பாராளுமன்றத்திற்கு அனுப்பும். இந்த ஊடகவியலாளர் களுக்கு தகவல் திணைக் களத்தினால் வழங்கப்படும் அடையாள அட்டை யும் அவர்கள் தம்முடன் வைத்திருக்க வேண்டும்.
பாராளுமன்றத்தில் சபாநாயகரின் ஆசனத்துக்கு மேல் பகுதியில் ஊடகவியலாளர்களுக்கான கலரி அமைந்துள் ளது. காலை 9.30 க்கு பாராளுமன்றம் ஆரம்பமாகும் போது ஊடகவியலாளர்களின் கலரி நிறைந்து காணப் படும். கேள்வி நேரம் முடிவடைந்து சபையில் பரபரப்பு குறைந்து விட்டதும் ஊடகவியலாளர்களின் பாதி பேர் ஊடகவியலாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்று அங்கு பொருத்தப்பட்டுள்ள இரண்டு தொலைக் காட்சியினூடாக சபை நடவடிக்கைகளை கவனிப்பதும், இதுவரை தாம் சேகரித்த செய்திகளை தமது நிறுவனத் துக்கு பெக்ஸ் செய்வதுமாக இருப்பார்கள்.
சில இலத்திர னியல் ஊடகவியலாளர்கள் தொலைக்காட்சியே கதி என்று கிடப்பவர்களும் உண்டு. ஆனால் பத்திரிகை யாளர்களாகிய எமக்கு சபைக்குள் அமர்ந்து சபை நடவடிக்கைகளை நேரடியாக பார்த்தும், கேட்டும் எழுதுவதில்தான் திருப்தியே இருக்கிறது. அதுதான் சரியானதும் கூட. இலத்திரனியல் ஊடகங்களிடையே யார் செய்தியை முதலில் கூறுவது என்ற போட்டியின் காரணமாக செலியூலர் தொலைபேசிகளுடன் முட்டி மோதிக்கொண்டிருப்பதையும் பத்திரிகையாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட அறையில் தினமும் காண்கிறோம்.
பாராளுமன்றத்திற்கு வழமையாக செல்லும் ஊடகவியலாளர் ஏதோ ஒரு காரணத்தால் வராமல் போனால் நிறுவனம் அவருக்கு பதிலாக ஒருவரை அனுப்புவது வழக்கம், அவரும் செய்திகளை சேகரித்து அனுப்புவார். அவர் புதியவரா? அல்லது அனுபவம் உள்ளவரா? என்றெல்லாம் பார்ப்பதில்லை. பாராளு மன்றமும் இதனை கண்டுகொள்வதுமில்லை. தகவல் திணைக்களம் வழங்கிய அடையாள அட்டை இருக்கி றதா? பாராளுமன்றத்தினால் வழங்கப்பட்ட அடையாள அட்டை இருக்கிறதா? இவை இரண்டை மட்டுமே பார்க்கிறார்கள். ஆனால் இந்திய பாராளுமன்றத்தில் இந்த நடைமுறை முற்றிலும் வேறானது.

பாராளுமன்றத்தினால் வழங்கப்படும் விசேட அனுமதி அட்டை நிறுவனத்துக்கு அல்லாமல் செய்தி சேகரிப்புக் காக வரும் ஊடகவியலாளரின் தனிப்பட்ட பெயருக்கே வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட செய்தி நிறுவனத்திற்காக அதன் ஊடகவியலாளர் பாராளுமன்ற ஊடகவியலாளர் கலரிக்கு செல்வதற்காக இது வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட ஊடகவியலாளர் தேசிய பாதுகாப்புக்காக முழுமையாக ‘ஸ்கிaனிங்’ செய்யப்படுகிறார். அவரது முழுமையான விபரங்கள் பெறப்படுகிறது. இவை எல் லாவற்றுக்கும் மேலாக இந்திய பாராளுமன்ற சபாநாயக ரினால் நியமிக்கப்பட்ட ‘Press Advisory Committee’ யினால் சிபாரிசு செய்யப்படவும் வேண்டும்.
ஒவ்வொரு செய்தி நிறுவனத்துக்கும் எத்தனை அனுமதி அட்டைகள் வழங்கு வது? யாருக்கு வழங்குவது என்று தீர்மானிப்பதும் இந்த குழுவினர் தான்.
குறிப்பாக ஒரு செய்தி நிறுவனத்துக்கு எத்தனை அனுமதி அட்டைகளை வழங்குவது என்று தீர்மானிப் பது பத்திரிகை நிறுவனமானால் அதன் விற்பனை, இலத்திரனியல் ஊடகமானால் மக்கள் மத்தியில் அதற்குள்ள மதிப்பு என்பன ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும் ஆய்வுகளினூடாக பெறப்படுகின்றன. அதனடிப்படையில்தான் அனுமதி அட்டையும் வழங்கப்படுகிறத
பாராளுமன்ற நிருபர் அனுமதி அட்டைகளின் எண்ணிக்கை அங்கே அதிகரிக்கப்படுவதில்லை. காரணம் இந்திய பாராளு மன்றத்தில் 120 ஆசனங்களே ஊடகவியலாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. அத்துடன் இவர்களுக்கு மேலதிகமாக மேலும் 57 ஆசனங்கள் முதல் வரிசையில் ஒதுக்கப்பட்டுள்ளது. இவை இந்தியாவின் முன்னணி பத்திரிகை, இலத்திரனியல் ஊடகங்களும் அதிக Circulatio உள்ளதுமான பத்திரிகைகள், வானொலி சேவைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
இவற்றைத் தீர்மானிக்கும் முழு பொறுப்பும் ஊடக ஆலோசனை சபைக்கு இருக்கிறது. 21 பேரைக் கொண்டதாக இந்தக் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. முன்னணி ஊடக நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் இதில் அங்கம் வகிக்கின்றனர். இக் குழுவின் ஆயுட்காலம் ஒரு வருடம் மட்டுமே.
தற்போது செயற்பட்டு வரும் ஊடக ஆலோசனை சபையின் தலைவர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்திக்க இந்திய பாராளுமன்ற செயலகத்தில் எமக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.
இந்திய பாராளுமன்றத்தின் சபாநாயகரினால் Press Advisory Committee உறுப்பினர்கள் நியமிக்கப்படுகிறார்.
மேற்படி குழுவில் தற்போது அங்கம் வகிக்கும் சரோஜ் நாகி என்பவரையும், கே.வி. பிரசாத் என்பவரையும், அனந் பகய்கர் என்பவரையும் பாராளுமன்ற குழு அறையில் சந்தித்தோம்.
சரோஜ் நாகி என்பவர் எச்.டி. மீடியா லிமிடட்டினால் வெளியிடப்படும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையின் இணை ஆசியராக கடமையாற்றுபவர். இவர் ஏற்கனவே இலங்கைக்கும் வந்து சென்றவர்

தினமும் 18 பதிப்புகளை வெளியிட்டு வரும் நெட்வேர்க் 18 ஊடக நிறுவனம்

ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் காணப்படும் மேன்சிங் வீதியின் நுழைந்தவுடனேயே முதலாவதாக தென்படும் தாஜ்மேன் சிங் ஹோட்டலுக்குள் நாம் சென்ற இந்திய தயாரிப்பான போர்ட் ரக சொகுசு வாகனம் நுழைந்தது.
வரவேற்பதற்காக புதுடில்லியிலுள்ள வெளியுறவு அமைச்சின் பிரசார பணிப்பாளர் கோபால் பாக்லே வந்திருந்தார். பிசியான வீதியொன்றில் வாகன நெரிசல்.
ஹோட்டலுக்குள் வாகனங்கள் வருவதும் போவதுமாக இருந்தன. கார் கதவுகளை திறந்துவிடவும், விருந்தினர்களை வழியனுப்பவுமாக ஹோட்டல் முன்வாயிலில் சுழன்று கொண்டிருந்தார்கள். மன்னர் காலத்து உடைகள், விசிறியை தலையில் வைத்தது போன்ற பெரிய தலைப்பாகை, பக்கவாட்டில் தொங்கவைத்திருக்கும் நீளமான வாள். ஒவ்வொருவரும் சுமார் 6ண அடி உயரம் இருக்கலாம். பிரமாண்டமான உருவங்களுடன் நீளமாக வளர்க்கப்பட்ட கிர்தாவுடன் நிற்பதை பார்க்கும் போது எங்கோ அரண்மனை வாசலில் நிற்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. ஹோட்டல் கட்டடமும் அரண்மனை போன்ற அமைப்புதான்.
புதுடில்லியிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் அதிகாரியான ஜானகி பர்னாண்டோ எம்மை ஹோட்டலில் விட்டு விட்டுப் புறப்பட்டார். எமக்குரிய அடுத்த நிகழ்ச்சி நிரலை தயார் படுத்துவதற்காக.
பகல் போசன விருந்துபசாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹோட்டலின் Villa Medici பகுதிக்கு லிப்டில் அழைத்துச் செல்லப்பட்டோம். அங்கே புதுடில்லியிலுள்ள இலங்கைத் தூதுவர் ரொமேஷ் ஜயசிங்க எச்.டி.மீடியா லிமிட்டடின் இணை ஆசிரியர் சரோஜ் நாகி ஹிந்து பத்திரிகையின் சிரேஷ்ட உதவி ஆசிரியர் கே.வி. பிரசாத் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சின் அதிகாரிகளும் இருந்தனர். நாம் சென்று சற்று நேரத்திலேயே இந்திய வெளியுறவு அமைச்சின் இணைச் செயலாளர் ரி.எஸ். திருமூர்த்தி வந்தார். எம்மை அவருடன் அறிமுகம் செய்து கொண்டதுடன் அவருடன் பகல் போசன விருந்துபசார மேசையில் அமர்ந்து கொண்டோம்.
இலங்கை- இந்திய உறவுகள் வலுவடைந்துள்ளமை பற்றியும் இலங்கை பாராளுமன்ற ஊடகவியலாளர்கள் முதல் முறையாக இவ்வாறான ஒரு பயணத்தை புதுடில்லிக்கு மேற்கொண்டமைக்காக வரவேற்பு தெரிவிப்பதுடன் இந்த பயணத்தை ஏற்பாடு செய்த எமது வெளியுறவு அமைச்சிக்கும், அமைச்சர் ரோஹித போகொல்லாகமவுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டு விருந்துபசாரத்தை ஆரம்பித்து வைத்தார். பதிலுக்கு எம்மோடு புதுடில்லி பயணத்தில் கலந்து கொண்ட ஊடகவியலாளர் சாந்தனி கிரிந்த, எமக்கு இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்த அமைச்சுக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.
இலங்கையில் கடந்தாண்டு நடைபெற்ற ‘சப்மா’ தெற்காசிய சுதந்திர ஊடக அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்திருந்த சரோஜ் நாகி என்பவரே எம்முடன் விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டார். இந்திய பாராளுமன்றத்தின் சபாநாயகரினால் நியமிக்கப்பட்டுள்ள Press Advisory Committee யின் தலைமைப்பதவியை ஏற்றுள்ளவரும் இவரே.
பாராளுமன்றத்திற்கு செய்தி சேகரிப்புக்காக செல்லும் ஊடகவியலாளர்களை அனுமதிப்பது தொடர்பாக முடிவுகளை எடுக்கும் உரிமை இந்த Press Advisory Committee க்கே உள்ளது. இதன் நடவடிக்கைகள் எவ்வாறு என்பது பற்றிய விபரங்களை அடுத்துவரும் கட்டுரைகளில் விரிவாக பார்ப்போம்.
இந்திய வெளியுறவு அமைச்சின் இணைச் செயலாளர் ரி.எஸ். திரு மூர்த்திக்கு அருகில் அமரும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் நானும் அவரும் தமிழிலேயே உரையாடினோம். இலங்கையில் மனிதாபிமான நடவடிக்கையின் பின்னர் இலங்கையில் தற்போதைய நிலை எவ்வாறு இருக்கிறது. என்பதை அறயவும் மக்கள் மீளக்குடியமர்த்தப்படுதல், நிவாரணக் கிராமங்களில் வழங்கப்பட்டு வரும் வசதிகள் குறித்தும் ஆவலாய் கேட்டறிந்து கொண்டார்.
இலங்கை பரீட்சை திணைக்களத்தால் க.பொ.த. உயர்தரம், 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான நிவாரணக் கிராமங்களில் எவ்வாறான வசதிகளை செய்து வருகிறது என்பதை நேரில் சென்று அவதானித்தவன் என்பதால் நேரில் கண்டவற்றை ஏட்டில் தயாரித்து வெளியுறவு இணைச் செயலாளர் திருமூர்த்தியிடமும் எமது இலங்கைத் தூதரிடமும் கையளித்தேன
பகல் விருந்துபசாரம் முடிவடைந்தவுடனேயே புதுடில்லியிலிருந்து நொய்டா செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. புதுடில்லியிலிருந்து உத்தரப் பிரதேசத்தை நோக்கி எல்லையை கடந்து செல்ல வேண்டும். சுமார் ஒரு மணி நேர பயணத்தின் பின்னர் நொய்டாவிலுள்ள திரைப்பட நகர்பகுதிக்குள் பிரவேசித்தோம். புதுடில்லியிலிருந்து உத்தரபிரதேச எல்லையை கடந்து செல்வதற்காக தனியான கட்டணம் செலுத்தவும் வேண்டும்.
CNN-IBN உட்பட அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களாக மும்பாய், டெல்லி என பல இடங்களிலிருந்தும் 24 மணி நேர செய்தி ஒளிபரப்புகளையும் பத்திரிகைகளிலும் அச்சிட்டு வரும் நிறுவனம்தான் Network 18 என்ற நிறுவனமாகும். நொய்டாவிலிலுள்ள எக்ஸ்பிரஸ் டிரேட் டவர் என்ற கட்டத்தின் 15,16,16 ஏ மாடிகளில் Network 18 நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் முகாமைத்துவ ஆசிரியர் வினய் திவாரி எம்மை வரவேற்றார். இந்தியா முழுவதும் செய்மதியூடான தொலைக்காட்சி அலைவரிசையாக விளையாட்டு செய்திகள், பேட்டிகள் வர்த்தகம் என சகல துறைகளிலும் உள்ளடக்கலாக இந்த நிறுவனம் செயற்படுகிறது.
இந்திய பாராளுமன்ற அமர்வுகளை இந்த தொலைக்காட்சி நிறுவனம் எவ்வாறு ஒளிபரப்புகிறது என்பது பற்றி புபேந்திரா செளபி என்பவரும், வினய் திவாரி என்பரும்எம்முடன் கலந்துரையாடினர். இலங்கையில் என்ன நடக்கிறது என்பதை அறிவதற்கு அவர்கள் ஆவலாய் இருந்தது எமக்கு நன்றாக புலனாகியது.
எமது நாட்டிலிருந்து வெளியாகும் செய்திப் பத்திரிகைகள் அனைத்தும் தினமொன்று மூன்று அல்லது நான்கு பதிப்புகளாக அச்சிடப்படுவதுண்டு. சில பெரும்பான்மை மொழி பத்திரிகைகள் 4 அல்லது 5 பதிப்புகளை அச்சிடுவதுமுண்டு. எமது நாட்டிலுள்ள மக்கள் தொகைக்கு ஏற்றால் போன்று பத்திரிகைகளின் விற்பனையும் அமைகிறது. Network 18 நிறுவனத்தினால் வெளியிடப்படும் செய்திப் பத்திரிகை 18 பதிப்புகள் அச்சிடப்படுவதாக அறிய முடிந்தது இலங்கையை விட பன்மடங்கு பெரிதான நாடு மட்டுமல்ல சனத்தொகையிலும் அதிகமான நாடு என்பதால் இது சாத்தியமாகலாம்.
Network 18 ஸ்டூடியோக்களை பார்வையிடுவதற்காக உள்ளே அழைத் செல்லப்பட்டோம். செய்தி வாசிக்கும் மேஜைக்கு மேல் ‘Braking News’ என எழுத்துகள் ஓடிக் கொண்டிருந்தன. அத்துடன் இலங்கைக்கும் அயர்லாந்துக்கும் இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் இலங்கை வெற்றியடைந்து விட்டது என்ற எழுத்துக்கள் ஓடிக்கொண்டிருந்தன. நாம் இலங்கையர் என்பதால் ஸ்டூடியோவுக்குள் இருந்த அனைவரும் எமக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.
எமது கலந்துரையாடலுக்கு மத்தியிலும் இலங்கை வெல்லப் போகிறது. இன்னும் இரண்டு ரன்கள் தான் எடுக்க வேண்டும் ஒரு ரன்தான் எடுக்க வேண்டும் என எமக்கு அடிக்கடி கூறிக் கொண்டிருந்தார் ஒரு சிங்.
24 மணிநேர அலைவரிசை என்பதால் அந்தப் பகுதியே ஜனநடமாட்டம் நிறைந்த பகுதியான வாகனங்களைக் கூட நிறுத்த இடமில்லாமல் இருந்தது. போகும் போது ஒரு மணி நேரத்தில் குறிப்பிட்ட இடத்தை அடைந்த போதும் திரும்பி வருவதற்கு சுமார் மூன்று மணி நேரத்தையும் விட சென்றுவிட்டது.
(தொடரும்)

இந்தியாவின் கதை சொல்லும் பாராளுமன்ற அருங்காட்சியகம்

கே. அசோக்குமார்
அசோக சக்கரவர்த்தியின் புதல்வர் மஹிந்தன் இலங்கைக்கு வந்ததன் பின்னர் அவரது சகோதரி சங்கமித்தை வெள்ளரசக் கிளையுடன் இலங்கைக்கு வந்தார்.
இதனை சித்தரிக்கும் விதத்திலான உருவச் சிலைகள் தான் இந்திய பாராளுமன்ற அருங்காட்சியகத்துக்குள் நுழையும் போது எம்மை வரவேற்கிறது. இந்தியாவில் புத்தமதம் பரவலாக பின்பற்றப்படும் மதமாக இல்லாவிட்டாலும் கூட புத்த மதத்தை மிக கெளரவிக்கும் நாடாக இந்தியா விளங்கி வருகிறது.
உண்மையிலேயே மனிதர்கள் நிற்பது போன்று செதுக்கப்பட்ட சிலைகள், கரையில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ள கட்டுமரக் கப்பல் நோக்கி பயணிக்கும் சங்கமித்தையும் குழுவினரும் எமக்கு விளக்கமளிக்கும் அருங்காட்சியகத்திலுள்ள பெண் எம்மைக் கண்டதும் இரட்டிப்பு மகிழ்ச்சியாக காணப்பட்டார்.
‘இலங்கைக்கான இந்தியாவின் முதல் சமாதான முன்னெடுப்பு சங்கமித்தை வெள்ளரசுக் கிளையை அங்கே எடுத்துச் சென்றதன் மூலம் ஆரம்பமானது’ என கூறிய அந்தப் பெண் இலங்கையரான எமக்கே இதனை கூறுவதற்கு கிடைத்த சந்தர்ப்பம் எனக் கூறி மகிழ்ந்தார்
அசோக சக்கரவர்த்தியின் கல்வெட்டுக்களை உணர்த்தும் வகையில் அவையும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
சங்கமித்தை இலங்கைக்கு வெள்ளரசுக் கிளையுடன் வந்த இடம் இன்று காங்கேசன்துறையில் சேத்தான் குளம் பகுதியில் அமைந்துள்ளது. இன்று ‘தம்பதொல பட்டுன’ என அழைக்கப்படுகின்ற இப்பகுதியில் சங்கமித்தை வெள்ளரசுக் கிளையுடன் வந்திறங்கியதை நினைவு கூரும் வகையில் அண்மையில் ஜனாதிபதி யின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ சங்கமித்தையின் உருவச் சிலையை பிரதிஷ்டை செய்து வைத்தார் என்பது நினைவிருக்கலாம்.
இந்தியா சுதந்திரமடைவதற்கு உருதுணையாக இருந்த சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறு அனைத்தும் திரையில் காண்பிக்கப்படுகிறது. நவீன தொழில்நுட்பத் திறனுடன் கூடிய அரைவட்ட வடிவில் ‘பனரோமா’ டிஜிடல் திரை அமைந்திருக்கும் ஒரு மினி தியேட்டரில் ‘சரொண்டிங்’ முறையிலான ஒலி அமைப்புடன் அவர்கள் திரையில் காட்டிய ஒலி அமைப்புடன் அவர்கள் திரையரங்கில் காட்டிய விவர்ண சித்திரம் அந்தக் காலத்துக்கே எம்மை அழைத்துச் சென்றது. 1940களுக்கு நாமும் செல்வது போன்ற உணர்வு ஏற்பட்டதுடன் சுதந்திர போராட்டத்திற்காக எந்தளவுக்கு தம்மை இந்தியர்கள் அர்ப்பணித்திருக்கிறார்கள் என்பதையும் உணர்ந்து மெய்சிலிர்த்தோம்.
சுமார் 20 x 10 அளவிலான அறை. அறையின் ஒரு பக்கம் வெண்திரை. காட்சி ஆரம்பமானதும் திரையின் நடுவே மகாத்மா காந்தி தமது பேத்திமாருடன் சகிதம் வந்து கொண்டிருக்க இருபுறமும் மக்கள் ‘ரகுபதிராகவ ராஜாராம்’ என்ற பாடலை இசைத்த வண்ணம் நின்று கொண்டிருப்பது காண்பிக்கப்படுகிறது.
நாம் நின்று கொண்டிருக்கும் அறையில் நாமும் திரையின் இருமருங்கிலும் நின்றவாறு திரையை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறும் போது மகாத்மா காந்தி எம்மை நோக்கி வந்து எம்மை கடந்து செல்வது போன்ற உணர்வு ஏற்படுகிறது. அந்த அளவுக்கு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
1947 ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி நள்ளிரவு இந்தியா சுதந்திரம் அடைந்ததை அறிவிக்கும் வகையில் பாரதஜோதி ஜவஹர்லால் நேரு அறிவித்து உரையாற்றுவதை அணிமேஷன் முறையில் செய்து காண்பித்திருக்கிறார்கள்.
இந்திய பாராளுமன்றத்தின் லோக்சபா மண்டபம் போன்று அமைக்கப்பட்ட அறை. சபாநாயகர் ஆசனத்தில் ஒருவர் அமர்ந்திருக்க பாராளுமன்ற உறுப்பினர்களும் அவரவர் ஆசனங்களில் அமர்ந்திருக் கும் படியான சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
பிரதமர் ஜவஹர்லால் நேரு உரையாற்றுவதற்கு ஒலிவாங்கிக்கு முன்னால் நின்று கொண்டிருப்பது போன்று பிரதமரின் சிலையும் வைக்கப்பட்டுள்ளது.
மாதிரி லோக் சபாவுக்குள் எம்மை அழைத்துச் சென்று சிலைகளாக அமர்ந்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் பக்கத்திலும் எம்மை அமரச் செய்தார்கள்.
மின் விளக்குகளின் வெளிச்சம் படிப்படியாக குறைய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் உருவத்துக்கு மட்டும் அதிக ஒளிபாயும் விதத்தில் மின் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. நாம் அமர்ந்திருந்த பகுதி இருட்டாக இருந்தது.
திடீரென பண்டிட் ஜவஹர்லால் நேரு தலையை உயர்த்தி எம்மை பார்க்கிறார். தலையை அங்கும் இங்குமாக அசைத்து அமர்ந்திருக்கும் உறுப்பினர்களை யும் எம்மையும் நோக்கி பார்ப்பதுடன் கண்களைச் சிமிட்டியபடி சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்திருந் துள்ளவரையும் ஒருமுறை பார்த்துவிட்டு, அவரது மேசையின் மீதுள்ள காகிதத்தை பார்த்தபடி இந்தியா சுதந்திரமடைந்து விட்டது என்ற உரையை ஆரம்பிக்கிறார்.
"Awake to freedom" long years ago We mae a tryst with destiny, and now The times come when we shall redeem our pledge, not wholly or in full measure, but very substantially ... என ஆரம்பிக்கும் உரை நேருவின் குரலிலேயே ஒலிக்கிறது.
சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்துள்ளவரும் அடிக்கடி உரையாற்றிக் கொண்டிருக்கும் பிரதமர் ஜவஹர்லால் நேருவை பார்ப்பதும் எம்மைப் பார்ப்பதுமாக இருந்தார்.
இதில் வியந்து போயிருந்த நாம் இருட்டில் எம்மோடு எமது அருகில் சிலைகளாக அமர்ந்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களை மெதுவாக ஓரக்கண்ணால் பார்க்கத் தவறவில்லை. இந்தச் சிலைகளினதும் அசைவுகள் தென்படுகின்றனவா? என்ற சந்தேகம்தான். ஒருபுறம் பயமாகவும் இருந்தது.
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமின் சிந்தனையில் உதித்த இந்த பாராளுமன்ற அருங்காட்சியகம் எல்லோரையும் வியக்கவைக்கிறது. புதுடில்லி செல்லும் அனைவரும் கட்டாயமாக பார்க்க வேண்டிய இடம் என்பதுதான் உண்மை. சுதந்திர போராட்டக் காலம்.
வெள்ளையர்களை எதிர்த்துப் போராடிய போராட்டங்கள், சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோஷ் தலைமையிலான படையெடுப்பு, வெள்ளையர்களால் மக்கள் விரட்டியடிக்கப்படுவதும், சுடப்படுவதுமான ஜாலியன்வாலாபாக் மாதிரியான சாட்சிகள் திரையில் காண்பிக்கப்படும் ‘@!ஜி இந்திய நாட்டின் மீது பரந்துள்ள ஒவ்வொரு இந்தியப் பிரஜையும் நிச்சயம் உணர்ச்சி மேலீட்டினால் மெய் சிலிர்த்துப் போவார்கள் என்பது நிச்சயம்.
இவை அனைத்தையும் தொகுப்பதற்கே நெடுநாள் ஆகியிருக்கலாம். இதனைச் சாதிக்க உழைத்தவர் அனைவரையும நன்றியுடன் நினைவு கூர வேண்டும்.
அவ்வாறான ஒரு பாராளுமன்ற நூலகம் எமது நாட்டிலும் அமைக்கப்படத்தான் வேண்டும். இந்தியாவில் நடைபெற்றதைப் போல் சுதந்திரப் போராட்டங்கள் இலங்கையில் நடைபெறாவிட்டாலும் குறிப்பிட்டுச் சொல்லும்படியான போராட்டங்கள் இங்கேயும் நிகழ்ந்துள்ளன. சமசமாஜிகள் போராடி இந்தியாவுக்கு தப்பியும் சென்றனர். இவற்றை தொகுத்து ஒளி - ஒலி காட்சிகளாக எமது மாணவர்களுக்கும் காட்டலாம். இது அவர்கள் மத்தியில் தேசப்பற்றை வளர்க்கும்.
எமது நாட்டில் பாராளுமன்ற அமர்வுகள் நடைபெறும் தினங்களில் சபை நடவடிக்கைகளைக்கான பெருந்திரளான மாணவர்கள் வருகிறார்கள். ஆனால் அவர்கள் அங்கு வந்து கற்றுக் கொடுப்பதற்கு என்ன இருக்கிறது. இந்திய பாராளுமன்ற அருங்காட்சியகத்தைப் பார்த்த பின்னர் எமது நாட்டிலும் பாராளுமன்ற அருங்காட்சியகம் ஒன்றை அமைப்பதன் அவசியத்தை வெகுவாக உணர்ந்தோம். இக்கோரிக்கை எமது சபாநாயகருக்கு சமர்ப்பணம்.
இந்திய பாராளுமன்ற அருங்காட்சியகத்துள் சென்று வெளியேவரும் ஒவ்வொருவருக்கும் ‘நான் இங்கே சென்றிருந்தேன்’ எனக் கூறிக் கொள்வதற்காக நினைவுச் சின்னங்களையும் அங்கே விலை கொடுத்து வாங்க முடியும். இந்திய பாராளுமன்ற அருங்காட்சியக சின்னம் பொறிக்கப்பட்ட பர்ஸ¤கள், கீ டெக்குகள், டேபிள் வெளிட்டுகள், பேனாக்கள், கடிகாரங்கள் உட்பட விலையுயர்ந்த பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன. அருங்காட்சியகத்தை முழுமையாக சுற்றிப் பார்ப்பதற்கு எமக்கு வழங்கப்பட்டிருந்த நேரம் போதுமானதாக இருக்கவில்லை. அன்று மதியம் இந்திய வெளியுறவு அமைச்சினால் தாஜ் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதிய போசன விருந்தில் கலந்து கொள்வதற்கு செல்ல வேண்டியிருந்தது. தொடரும

போதி மாதவனின் புனித எலும்புகளைக் கொண்டிருக்கும் டில்லி அருங்காட்சியகம்

பெளத்த மக்களால் தரிசிக்கப்படுகின்ற புத்தரின் புனித தந்தம் கண்டி தலதா மாளிகையில் தங்கப் பேழையில் வைக்கப்பட்டுள்ளது. பெளத்தர்கள் இதனை ‘தந்த தாதுன் வஹான்சே’ என அழைப்பார்கள். அதே போன்று பெளத்தர்களால் ‘கேஷதாதுன் வஹன்சே’ என அழைக்கப்படுகின்ற புத்தரின் புனித கேசம் (தலைமயிர்) மியன்மாரில் வைக்கப்பட்டுள்ளது. ஒரு முறை இது இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது நினைவிருக்கலாம்.
இவை போன்றே ‘சர்வக்ஞதாதுன் வஹன்சே’ என பெளத் தர்களால் அழைக்கப்படுகின்ற புத்தரின் எலும்புகளின் துண்டுகள் தங்கப் பேழையில் புதுடில்லி தேசிய அருங்காட்சி யகத்தில் மிகவும் கவனமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இதற்கென தங்கப் பேழையொன்றை தாய்லாந்து அன்பளிப்பாக வழங்கியும் இருக்கிறது. இலங்கையிலிருந்து புத்தகாயா, காசி போன்ற புனித தலங்களுக்கு செல்லும் இலங்கையர் (பெளத்தர்கள்) கட்டாயமாக தரிசிக்க வேண்டிய ஒன்றுதான் இது என புதுடில்லியில் உள்ள இலங்கையின் பிரதி தூதுவர் பாலித்த கனேகொட தெரிவித்தார்.
அருங்காட்சியத்தினுள் செல்வதற்கு வெளிநாட்டினருக்கு 150 ரூபாவும், கமரா கொண்டு செல்வதானால் அதற்கென 300 ரூபாவும் அறவிடுகிறார்கள். திங்கட்கிழமை மட்டும் அருங்காட்சியகம் மூடப்படும், ஏனைய நாட்களில் காலை 10.00 மணி முதல் 5 மணி வரை திறந்திருக்கும்.
இலங்கை தூதரகத்தின் பிரதி தூதுவர் கனேகொட, முதற் செயலாளர் சுகீஸ்வர, ஜானகி ஆகியோர் எம்முடன் வந்ததால் இலவசமாகவே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டோம்.
புத்தரின் புனித பேழை இருக்கும் பகுதியை சென்றடைந்ததும் என்னோடு வந்த ஏனையவர்கள் (பெளத்தர்கள்) பேழையை தொட்டு தரிசிப்பதும், தாம் அதற்கு மண்டியிட்டு வணங்குவதுமாக பல புகைப்படங்களை எடுக்குமாறு கூறிக்கொண்டே இருந்தார்கள். அவர்களை அங்கிருந்து வெளியே கொண்டுவர வெகு நேரமாகிவிட்டது. அருங்காட்சியத்தை பார்வையிட ஒருநாள் போதாது. இந்திய கட்டட கலை, ஓவியக் கலை புதைபொருள் ஆராய்ச்சியின் மூலம் கண்டெடுக்கப்பட்ட கற் சிலைகள் என பார்க்கும் இடமெல்லாம் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
எம்மோடு வந்த தொலைக்காட்சி நிறுவன நண்பர்கள் இருவர் அருங்காட்சியக பொறுப்பாளரிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்தார்கள்.
இதற்கிடையே அருங் காட்சியத்தில் இந்து நாகரிகம் தொடர்பாக ஏதாவது கண்களுக்கு தென்படுகின்றனவா? என தேடிய போது இரண்டு முக்கிய பொருட்கள் வளவுக்குள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்ததைக் கண்டேன்.
சித்திரத் தேர்களை நாம் பார்த்திருக்கிறோம், மாத்தளையில் பஞ்சரத பவனியில் பார்த்திருக்கிறோம். முன்னேஸ்வரத்திலும் சித்திரத் தேரையும் பார்த்திருக்கிறோம். தலைநகரிலும் பார்த்திருக்கிறோம். சித்திரத் தேரில் சுவாமியின் பீடம் இருக்கும் இடத்திலிருந்து வியாழ மட்டம் என அழைக்கப்படுகின்ற பகுதிவரை சிறிய சிறிய சித்திர வேலைப்பாடுகள் மரத்தில் செதுக்கப்பட்டிருக்கும். இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் கட்டுத் தேர்கள் தான் உள்ளன. 18, 19 ஆம் நூற்றாண்டில் கும்பகோணம் லக்ஷ்மி நாராயணன் கோவில் திருவுலா சென்ற பிரமாண்டமான சித்திரத் தேர் ஒன்றையும் அருங்காட்சியகத்தின் நுழைவாயிலுக்கு அருகே காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.
மகாவிஷ்ணுவின் அவதாரங்கள் அனைத்தையும் சித்திரிக்கும் விதத்தில் 425 சிறிய சிற்ப வேலைப்பாடுகளுடனும் ஆறு சக்கரங்களுடனும் சுமார் 2,200 கிலோ எடைகொண்ட இந்த சித்திரத் தேர் பழுதடையாமல் இருப்பதற்காக பிரமாண்டமான கண்ணாடி அறை அமைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.
இதேபோன்று 15 ஆம் நூற்றாண்டின் விஜயநகர பேரரசு காலத்தைச் சேர்ந்த ஆலயமொன்றின் பிரமாண்டமான சிவலிங்கம் ஒன்றும் பீடத்துடன் அருங்காட்சியகத்தின் முன் புறத்திலேயே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற அருங்காட்சியகம்
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் அவர்களது சிந்தனையில் உதித்ததுதான் பாராளுமன்ற அருங்காட்சியகம்.
சுமார் 2500 வருடங்களுக்கு முன்னிருந்து இந்தியாவின் சரித்திரத்தையே நவீன தொழில்நுட்பம், மல்டி மீடியா, பனரோமா புரொஜெக்ஷன் அனைத்தையும் பயன்படுத்தி எவ்வளவு நேரமும் வேண்டுமானாலும் உள்ளே இருந்தவாறு பார்த்துக்கொண்டு இருக்கக் கூடியவாறு இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
ஒரு மெல்லிய ஒலியில் ‘ரகுபதி ராகவ ராஜாராம்’ என்ற பாடல் ஒலித்துக்கொண்டிருக்க அருங்காட்சியகத்தினுள் நுழைந்தோம்.
எமது இலங்கை பாராளுமன்றத்திலுள்ளும் ஒரு அருங்காட்சியகம் இருக்கிறது. முன்பிருந்த சபாநாயகரின் ஆசனங்கள், என நான்கு கதிரைகளும், அவர்கள் அணிந்திருந்த தொப்பிகள் என இரண்டு தொப்பிகளும் உள்நுழைவாயிலுக்கருகே வைக்கப்பட்டுள்ளன
பாராளுமன்ற அமர்வுகளை காண்பதற்காக வரும் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் அவற்றையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பதை பலமுறை கண்டிருக்கிறோம். மாணவர்கள் பாராளுமன்றத்தினுள் வந்தால் எமது இலங்கை எவ்வாறு சுதந்திரம் அடைந்தது? சுதந்திரத்திற்காக போராடியவர்கள் யார்? பாராளுமன்றம் என்றால் என்ன?
இங்கே என்ன நடக்கிறது? இதன் அமைப்பு என்ன? ஆளுந்தரப்பு யார்? எதிர்த்தரப்பு யார்? இந்த கேள்விகளுக்கு விடை தெரியாமல் உள்ளே நடக்கும் சில வாக்கு வாதங்களை மட்டும் பார்த்துவிட்டு செல்கிறார்கள். பாராளுமன்றத்திற்கு வரும் மாணவர்களுக்கு பால் வழங்க வேண்டும் என்ற ஆலோசனை முன்வைக்கப்பட்டு இப்போதுதான் அதுவும் வழங்கப்பட்டும் வருகிறது.
இந்தியாவின் சுதந்திரத்துக்காக போராடி உயிர் நீத்தவர்களை மினி தியேட்டர் ஒன்றினூடாக விசேட ஒளி - ஒலி அமைப்புகளுடன் கண் முன்னே கொண்டு வந்து காண்பிக்கிறார்கள்.
முதலாவது இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் ஆடைகள் அவர் உபயோகித்த பொருட்கள், மகாத்மா காந்தியின் போராட்ட வடிவங்கள், அவரது உண்மையான குரலில் எனிமேஷன் முறையில் அவர் உடல் அசைவுகள் என்பவற்றை செய்து காண்பிக்கிறார்கள்.
வருடாந்தம் சுமார் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் இந்த அருங்காட்சியத்துக்கு வந்து செல்கிறார்கள். புதுடில்லியிலுள்ள பாராளுமன்ற நூலக கட்டடத்தின் ஒரு பகுதியில் இந்த காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. 2009 ஜுலை வரை மட்டும் சுமார் 77,000 பேர் வரை வருகை தந்துள்ளனர்.
வரவேற்பறையில் இலங்கை பாராளுமன்ற ஊடகவியலாளர் சங்கத்தின் பிரதிநிதிகளான எங்களை அருங்காட்சியத்தை சுற்றிக் காண்பிப்பதற்கு ஆயத்தமாக இருந்த பெண் எம்மை வரவேற்றார். (தொடரும்)

இலங்கையரும் இனி இருபது ரூபா டிக்கட்டில் தாஜ;மஹாலை தரிசிக்கலாம்

டில்லியில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகம் கொழும்பு கறுவாக்காட்டை ஒத்த சாணக்யாபுரி பகுதியில் உள்ளது. இங்கே வெளிநாட்டு தூதரகங்கள் அடுத்தடுத்து காணப்படுகின்றன. என்றாலும் இலங்கை தூதரகத்தை உடனடியாக இனங்கண்டு கொள்ளமுடியும்.
இலங்கையிலுள்ள கண்டி தலதா மாளிகை, மற்றும் பெளத்த வணக்கஸ்தலங்களின் மதில்கள் "எத்பவுர" என பெளத்த மக்களால் அழைக்கப்படுகின்ற அமைப்பில் இலங்கைத் தூதரக மதில்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த அமைப்பு இது நமது தூதரகம்தான் என்பதை நமக்கு எளிதாக அடையாளம் காட்டிவிடும்.
இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகள் 1942 களில் முதலில் ஆரம்மானது. இந்தியாவுக்கு இலங்கையின் முதல் பிரதிநிதியாக சேர் டி. பி. ஜயதிலக்க நியமிக்கப்பட்டிருந்தார். 1948 சுதந்திரத்தின் பின்னர் தான் முழுமையான உயர் ஸ்தானிகராலயமாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் ஸ்திரம் பெற்றன.
ஆரம்பம் முதல் இலங்கையுடன் உள்ள நல்லுறவு காரணமாக இலங்கை உயர் ஸ்தானிகராலயத்திற்கென சுமார் 4 ஏக்கர் நிலப்பரப்பை இந்திய அரசு வழங்கியது. தூதுவரின் பிரதித் தூதுவர், மற்றும் உயர்ஸ்தானிகராலய இலங்கை அதிகாரிகள் ஆகியோருக்கான வாசஸ்தலங்களும் ஒரே இடத்தில் அமைந்துள்ளன.
இலங்கை - இந்திய உறவு குறித்து பேசும் போது 1942 ஆம் ஆண்டு முதல் முதலாக இராஜதந்திர உறவுகள் ஏற்பட்டது என்று கூறி விடமுடியாது.
அசோக்க சக்கரவர்த்தியின் புதல்வர் மஹிந்தன் இலங்கைக்கு வந்ததும், அவரது மகள் சங்கமித்தை வெள்ளரசு கிளையை இலங்கைக்குக் கொண்டு வந்தமையையும் இதன் ஊடாக இலங்கையுடனான உறவு ஆரம்பமானது. இதனை நினைவு கூரும் விதத்தில் இந்திய பாராளுமன்றத்தின் அருங்காட்சியகத்தின் நுழைவாயிலிலேயே சிலைகளாக செதுக்கி வைத்திருக்கின்றனர்.
முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமின் ஆலோசனைக்கமைய பாராளுமன்ற அருங்காட்சியகம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதன் நுழைவாயிலுக்கருகிலேயே சங்கமித்தை வெள்ளரசுக் கிளையை இலங்கைக்கு எடுத்து வந்தமையை சித்திரிக்கும் சுதையிலான சிற்பங்கள் உள்ளன.
இந்திய பாராளுமன்ற அருங்காட்சியகம் பற்றி அடுத்தடுத்துவரும் கட்டுரைகளில் விரிவாக பார்ப்போம்.
இலங்கைத் தூதரகத்தின் பிரதி தூதுவர் பாலித்த கணேகொடவின் இல்லத்தில் எமக்காக இரவு விருந்துபசாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு எம்மை உயர்ஸ்தானிகராலயத்தின் முதற் செயலாளர் சுகீஸ்வர குணரட்ன வரவேற்றார். அத்துடன் பிரதி உயர்ஸ்தானிகர் பாலித்த கணேகொடவும் வரவேற்றார்.
புதுடில்லி சென்று மூன்று தினங்களாகியும் சப்பாத்தி, பூரி, அலுபராட்டாவையே மொச்சு மொச்சு எனத் தின்று வெறுத்துப்போயிருந்த எமக்கு எமது தூதரகத்தில் விருந்து என்றதும் சோறு கறி ஞாபகம் வந்து நாக்கில் உமிழ் நீர்களை கட்டத் தொடங்கியிருந்தது. அங்கெல்லாம் ஹோட்டல்களில் பிளேட்டில் சோற்றை குன்று போலக் குவித்து அதன் மேல் கறிகளை அபிஷேகம் செய்து சாப்பிடுபவர்களை மருந்துக்கும் பார்க்க முடியாது. அதைப்பார்க்க தமிழ் நாட்டுக்குத்தான் செல்ல வேண்டியிருக்கும்.
புதுடில்லி செல்பவர்களுக்கு சாப்பாடு ஒரு பிரச்சினைதான். சப்பாத்தியை எத்தனை நாள்தான் சாப்பிடுவதாம்? நாக்கு மரத்துப் போய்விடாது!
இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் பிரதித் தூதுவரின் இல்லத்துக்குள் சென்ற சில நிமிட நேரத்தில் அப்போது மிக முக்கிய இடமாகத் தெரிந்த சமையலறைக்குள் நுழைந்தேன். நம்மூர் சமையல் வாசனை கமகமத்தது. அங்கு எமது நுவரெலியாவை சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவரின் கண்காணிப்பில் சாப்பாடு தயாராகிக் கொண்டிருந்தது. எனக்கு எது இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருந்தது.
உணவு தயாராகும் வரை இலங்கை இந்திய உறவுகள் குறித்து உதவி தூதுவருடனும் முதற் செயலாளர் சுகீஸ்வர குணரட்னவுடனும் பேசிக் கொண்டிருந்த போது இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து இந்தியாவின் நிலைப்பாடு பற்றியும் எம்மோடு பேசினார்.
இந்தியாவின் ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மகாலை கண்டுகளிப்பதற்காக வரும் வெளிநாட்டினருக்காக பெருந்தொகை (ரூ 750/=) பணம் அறவிடப்படுகிறது. ஆனால் இலங்கைப் பிரஜைகளைப் பொறுத்தவரை இந்தியர்களுக்கு அறவிடும் அதே இருபது ரூபாவை கட்டணமாக அறவிடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்ற இனிப்பான தகவலையும் எமக்குத் தந்தார்.
லேக்ஹவுஸ் பத்திரிகையாளர்கள் இருவர் தெரியாத்தனமாக இருபது ரூபா டிக்கட்டை வாங்கி உள்ளே சென்று இரண்டு தடவை லஞ்சப் பொலிஸாரிடம் சிக்கி ஏறக்குறைய 1300 ரூபாவரை இழந்து திரும்பிய கதை எனக்கு அப்போது ஞாபகத்துக்கு வந்தது.
சார்க் நாடுகளிலிருந்து வரும் உல்லாச பயணிகளுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளதாம். தாஜ்மகால் நுழைவு வாசலிலேயே இதற்கான அறிவித்தல் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். உண்மைதான் நுழைவுக் கட்டணமாக 750 இந்திய ரூபாவை கொடுப்பது கொஞ்சம் கஷ்டமான காரணம் தான்.
புத்தகயா, தாஜ்மகால் போன்ற தலங்களைத் தரிசிக்க வரும் இலங்கையர்களுக்குத் தேவையான வழிகாட்டல்களை இலங்கை தூதரகம் செய்து வருவதுடன் இலங்கை மீனவர்கள் இந்தியாவில் கைதாவது தொடர்பாகவும் உடனுக்குடன் நடவடிக்கைகளை எடுத்துவருகிறது என்பது பற்றியும் அறியமுடிந்தது.
இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையேயான உறவுகள் 1971 ஆம் ஆண்டுகளில் மிகவும் வலுப்பெற்றிருந்தது என்பதற்கு முன்னாள் மறைந்த பிரதமர் ஸ்ரீமாவோ பண்டார நாயக்கவுக்கும் முன்னாள் மறைந்த இந்திய பிரதமர் இந்திரா காந்திக்கும் இடையே இருந்த நெருங்கிய உறவு ஒரு காரணமாக இருந்தது என்பதையும் குறிப்பிடலாம்.

புதுடில்லியை பற்றி கூறுவதென்றால் சைக்கிள் ரிக்ஷாவை பற்றி கூறாமல் இருந்துவிட முடியாது. புதுடில்லி நகரில் ஜனநடமாட்டம் அதிகமாக காணப்படும் பகுதிகளில் எல்லாம் எங்கு பார்த்தாலும் கைக்கிள் ரிக்ஷாக்கள்தான். டில்லி ஹாட், சாந்தனி சோவ்க், சரோஜினி நகர், பாலிக்கா பஸார், கோரல்பார் போன்ற பகுதிகளில் எந்நேரமும் வாகன நெரிசல் மிகுதியாகக் காணப்படும். கனரக வாகனங்கள் சில பகுதிகளுக்குள் செல்லத்தடை விதிக்கப்பட்டுள்ளதால் +(யிரிஸிu சைக்கிள் ரிக்ஷவையே பெருமளவு பயன்படுத்துகிறார்கள்.
உல்லாச பயணிகள் ரிக்ஷாவை ஆசைக்காக பயன்படுத்துகிறார்கள். ரிக்ஷாக்காரர்களிடம் பேரம் பேசி சவாரிக்காக அமர்த்திக் கொள்வது மொழிப் பிரச்சினை காரணமாக ரொம்பவும் சிரமப்பட்டாக வேண்டும்.
பாடசாலை மாணவர்கள் சுமார் 10 முதல் 15 பேர் வரை சைக்கிள் ரிக்ஷாவில் ஏறிச் செல்வதை பார்த்து ஆச்சரியமடைந்தோம். ஆனால் இவர்களை ஏற்றிச் செல்லும் போது ரிக்ஷாக்காரர் படும் அவஸ்தையை பார்க்கும் போது மிகவும் வேதனையாக இருந்தது.
இந்திய தேசிய அருங்காட்சியகம்
புதுடில்லியிலுள்ள ஜன்பாத் மற்றும் மெளலானா ஆசாத் சாலையையும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ள இந்தியாவின் மிகப்பெரிய தேசிய அருங் காட்சியகத்திற்கு எம்மை இலங்கையின் பிரதித் தூதுவர் பாலித்த கனேகொட அழைத்துச் சென்றார்.
இங்கே வரலாற்றுக்கு முந்திய காலத்தைச் சேர்ந்த பொருட்களிலிருந்து தற்கால கலைப் பொருட்கள் வரை உள்ளன. இது இந்தியாவின் மத்திய அரசின் பண்பாட்டு அமைச்சின் கீழ் இயங்கி வருகிறது.
இங்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
5000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட பண்பாட்டு மரபை விளக்குவதாக இந்த அருங்காட்சியகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொல்லியல் பொருட்கள், படைக்கலங்கள், அழகூட்டற்கலைப் பொருட்கள், அணிகலன்கள், கையெழுத்துப் பிரதிகள், ஓவியங்கள், இந்திய கட்டடக்கலை, சிற்பக்கலை போன்றவையும் உள்ளன.
புதுடில்லியில் இந்திய தேசிய அருங்காட்சியகம் 1949 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி சுதந்திர இந்தியாவின் முதலாவது கவர்னர் ஜெனரலாக விளங்கிய தமிழரும் எழுத்தாளருமான சக்கரவர்த்தி இராஜ கோபாலாச்சாரியார் (இராஜாஜி) இதைத் திறந்து வைத்தார்.
1955ம் ஆண்டு மே மாதம் 12 ஆம் திகதி தேசிய அருங்காட்சியகத்திற்கான புதிய கட்டடத்தை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. அன்று பிரதமராக இருந்த பண்டித் ஜவஹர் லால் நேரு அடிக்கல்லை நட்டுவைத்தார். (தொடரும்)

CHAMBER OF PRINCES என அழைக்கப்பட்ட இந்திய பாராளுமன்றம

கே. அசோக்குமார் ...-
இந்திய பாராளுமன்ற கட்டட வளவில் அமைந்துள்ள நூலக கட்டடத் தொகுதியில் அமைந்திருக்கும் பாராளுமன்ற கற்கைகள், பயிற்சி நெறிக்கான பணியகத்தில் இலங்கையிலிருந்து சென்ற பாராளுமன்ற ஊடகவியலாளர் குழுவுக்கு முழுநாள் செயலமர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
செலியூலர் தொலைபேசிகள், கமராக்கள் போன்ற எந்தவிதமான இலக்ரோனிக் உபகரணங்களும் உள்ளே கொண்டு செல்ல முடியாது. பலத்த சோதனையின் பின் உள்ளே சென்றோம். எமக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாட்டு மண்டபத்தினுள் அழைத்துச் செல்லப்பட்டோம். மக்களவை (லோக் சபா) செயலகத்தின் மேலதிக பணிப்பாளர் ஆர். எல். ஷாலி எம்மை வரவேற்று எம்மைப் பற்றி கேட்டுத் தெரிந்து கொண்டார்
இந்திய பாராளுமன்ற அமர்வுகளை எவ்வாறு ஊடகங்கள் மக்களுக்கு அறிவிக்கின்றன? அதற்கான வழிவகைகள் என்ன? என்பன போன்ற பல்வேறு தகவல்களையும் விளக்கங்களையும் லோக் சபா செயலகத்தின் இணைச் செயலாளர் பீ. கே. மிஸ்ரா எம்மிடம் தந்தார், விவரித்தார்.
இந்திய பாராளுமன்றத்தின் லோக் சபா செயலகமாகவும் பாராளுமன்ற நூலகமாகவும் மாநாட்டு மண்டபங்களாகவும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உணவு அறை, நூலக கட்டடமாகவும் இக்கட்டடம் அமைந்திருக்கிறது
அதிநவீன தொழில் நுட்பமும், பழைமையையும் ஒன்றிணைத்த சுமார் 10 ஏக்கர் விஸ்தீரணத்தில் இக்கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. 50,000 சதுர அடிகொண்டதாக முழு கட்டடமும் மூன்று மாடிகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற நூலகத்தில் நிலக்கீழ் தளமும் அமைக்கப்பட்டுள்ளது.
நாம் அமர்ந்திருந்த பகுதி (Committee Room C - Ground Floor என குறப்பிடப்பட்டிருந்தது. இதே கட்டடத்திலேயே லோக் சபா ஸ்டூடியோக்களும் அமைந்திருந்தன.
பாராளுமன்ற கற்கைகள், பயிற்சி நெறிகளுக்கான பணியகம்
புதிதாக நியமனம் பெறும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராளுமன்ற நடைமுறைகள், சிறப்புரிமைகள் போன்ற முக்கிய விடயங்கள் குறித்த செயலமர்வுகள் எமது நாட்டிலும் நடத்தப்படுகின்றன. ஆனால் இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமல்லாமல் பாராளுமன்ற உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள், மக்களவை, மாநிலங்களவை சட்டமன்ற உறுப்பினர்கள், எல்லோருக்குமாக பயிற்சிகளையும், கற்கைகளையும் இந்த பணியகம் வழங்குகிறது.
குறிப்பாக இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த சட்ட சபை உறுப்பினர்களுக்கும் இதே போன்று விசேட பயிற்சிகளை வழங்குகிறது. இவை அனைத்தும் இலவசமே.
இலங்கையிலிருந்தும் எமது பாராளுமன்றத்தில் உதவி சபாநாயகர் உட்பட பாராளுமன்ற உத்தியோகத்தர்கள் இருவரும் பயிற்சிகளை பெற்றுத் திரும்பியதாக தெரிவித்தனர்.
மக்களவை (லோக் சபா)யின் செயலகத்தின் ஒரு பிரிவாக 1976 ஆம் ஆண்டிலேயே மேற்படி பணியகம் உருவாக்கப்பட்டது.
இப்பணியகத்தில் இரண்டு பிரதான பயிற்சி மற்றும் கற்கை நெறிகள் உள்ளன.
‘பாராளுமன்ற உள்ளக பயிற்சி செயற்திட்டம்’ என்றும் சட்டவாக்க வரைபுகள் குறித்த சர்வதேச பயிற்சித் திட்டம் என்ற இரு பயிற்சித் திட்டமும் உள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விரிவுரைகள், செயலமர்வுகள், கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள், விவாதங்கள், தகவல் தொழில்நுட்ப பயிற்சிகள் என்பவற்றையும் தொடர்ந்தும் இந்த பணியகம் நடத்திவருகிறது.
இந்தப் பணியகத்தின் கெளரவ ஆலோசகராக திருமதி மார்கிரட் அல்வா என்ற பழுத்த அரசியல்வாதி நியமிக்கப்பட்டிருக்கிறார்.
பணியகத்தின் நடைமுறைகள் மட்டுமல்லாது இந்திய அரசியலமைப்பு, பாராளுமன்ற நடைமுறைகள் குறித்தும் எமக்கு விளக்கமளித்தார்.
இந்திய பாராளுமன்றத்தின் விசேட விருந்தினர் உணவு அறையில் திருமதி மார்கிரட் அல்வாவுடன் எமது குழுவினருக்கு பகல் உணவு அளிக்கப்பட்டது.
திருமதி மார்கிரட் அல்வ
தற்போது உத்தர காண்ட் மாநில ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ள இவர் முதலாவது பெண் ஆளுநர் என்ற பெருமையையும் பெறுகிறார். இந்திய தேசிய காங்கிரஸின் பொதுச் செயலாளராகவும் இருந்த இவர் 1942 ஏப்ரல் 14ஆம் திகதி பிறந்தார்.
2009 ஜூலை 29 ஆம் திகதி உத்தரகாண்ட் மாநில ஆளுனராக திருமதி சோனியா காந்தி நியமித்தார். தீவிர காங்கிரஸ் ஆதரவாளரான இவர் மேற்படி பணியகத்தின் கெளரவ ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்திலேயே அவரை சந்திக்கும் வாய்ப்பு எமக்குக் கிடைத்தது.
பாராளுமன்ற நூலகம
மதிய உணவு வேளையின் பின்னர் பாராளுமன்ற நூலகத்தை சுற்றிப்பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.
நூலகத்தின் கட்டடப் பகுதி பல பிரிவுகளைக் கொண்டதாக இருந்தது. செய்திப் பத்திரிகைகளுக்கென தனியான பிரிவு இருக்கிறது. எமது லேக்ஹவுஸ் நிறுவனத்திலிருந்து வெளிவரும் எமது சகோதர பத்திரிகையான டெய்லிநியூஸ் பத்திரிகை உட்பட எந்தவொரு நாட்டில் பிரசுரமாகும் பத்திரிகையையும் இங்கு காணலாம். எங்கும் மிக அமைதியான சூழல், நூலகத்தின் உள்ளே வெளிச்சத்திற்காக மின் விளக்குகள் இல்லை. இயற்கை வெளிச்சம் உள்ளே பரவும் அளவுக்கு இக்கட்டத்தின் கூரை வடிவமைக்கப்பட்டுள்ளது. நவீன தொழில் நுட்பமும், இந்திய பாரம்பரிய கட்டடக் கலையும் ஒருங்கிணைந்து காணப்படும் கட்டடம் இது. மகாத்மா காந்தியின் நூல்களுக்கென தனியான அறை. இதில் அவரைப் பற்றிய சகல தகவல்களும் உள்ளடக்கப்பட்ட ஆயிரக் கணக்கான நூல்கள் எம்மை ஆச்சரியப்பட வைத்தன.
ஜவஹர்லால் நேருவின் நூல்களும் ஒரு தனியான அறையில் மிக நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களுக்காக தனியான நூலக வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
நூலகத்திலிருந்து வெளியேறிய போது பாராளுமன்றத்தில் மக்களவை அமர்வுகளை நேரடியாக பார்ப்பதற்காக எம்மை அழைத்துச் செல்ல பிரதிநிதி ஒருவர் வந்திருந்தார்.
மாலை 4.00 மணி முதல் 5.00 மணிவரையில் பார்வையாளர் கலரியில் அமர்ந்து பார்க்க முடியும் என எமக்காக வழங்கப்பட்டிருந்த அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அனுமதி அட்டையையும் பையில் உள்ள பணத்தையும் தவிர வேறு எதனையும் கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை.
இந்தியப் பாராளுமன்றம
பாராளுமன்ற கட்டடத்தினுள் நுழைந்த வேளையிலிருந்து லோக்சபா பார்வையாளர் கலரிக்குள் நுழையும் வரை சுமார் 5 - 6 இடங்களில் தீவிர பரிசோதனைகள் நடக்கின்றன. பழைமையும் சரித்திர முக்கியத்துவமும் மிக்க இக் கட்டடத்தை வெறும் கட்டடமாக கருதாமம் இங்குள்ளவர்கள் இதை இந்திய ஜனநாயகத்தின் உச்ச ஸ்தானமாகவும் ஒரு கோவிலைப் போன்ற புனிதமான இடமாகவும் கருதுவதை அவதானித்த போது மெய்சிலிர்த்தது. இதை நாட்டுப் பற்றின் வெளிப்பாடாக நாம் காணலாம்.
இந்தியப் பாராளுமன்றத்தை ஹிந்தியில் ‘சன்சத்பவன்’ என அழைக்கிறார்கள். இந்தக் கட்டடம் வட்டவடிவ அமைப்பில் கட்டடப்பட்டுள்ளது.
சேர். எட்வின் லுத்தியன்ஸ் மற்றும் சேர். எர்பர்ட் பேக்கர் ஆகிய இருவரே இக்கட்டடத்தை வடிவமைத்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் பிரித்தானிய கட்டடக் கலைஞர்களாவர்.
1912- 1913 ஆம் ஆண்டுகளில் வடிவமைக்கப்பட்டு கட்டட வேலகள் 1921 இல் ஆரம்பிக்கப்பட்டது. 1927 இல் மாநிலங்கள் அவைக்காகவும், மத்திய சட்டமன்றத்திற்காகவும் அமைக்கப்பட்ட இக் கட்டடம் ஆரம்பத்தில் இளவரசர் கூடம் (CHAMBER OF PRINCES) என அழைக்கப்பட்டது.
144 பளிங்குத் தூண்களால் கட்டடத்தின் வெளிக்கட்டுமானச் சுவர் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் மையப்பகுதியிலிருந்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கும் நேரடியாக செல்லலாம். இதன் தோற்றத்தை நான் முன்னைய கட்டுரையில் குறிப்பிட்டது போன்று இந்தியா கேட் பகுதியிலிருந்தும் பார்க்க முடியும். (தொடரும

கேள்வி நேரம் நேரம் நேரடியாக் லோக் சபா டிவியில் ஒளிபரப்பாகிறது

கே. அசோக்குமார்
மாலை சுமார் 4.00 மணிக்குத்தான் இந்திய பாராளுமன்றத் தில் லோக்சபாவுக்கு (மக்களவைக்கு) செல்வதற்கான அனுமதி எமக்கு வழங்கப்பட்டிருந்தது. சபாநாயகரின் ஆசனத்துக்கு எதிரே பார்வையாளர் கலரியில் எம்மை அமரச் செய்தார்கள். மெளனமாக அமர்ந்தவாறு சபை நடவடிக்கைகளை அவதானித்துக் கொண்டிருந்தோம்.
வரவு-செலவு திட்டம் மீதான குழு நிலை விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. சபாநாயகரின் ஆசனத்தில் தமிழ்நாடு அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற் றக் கழகத்தின் உறுப்பினர் திரு. தம்பித்துரை அமர்ந்து சபையை வழிநடத்திக் கொண்டிருந்தார். நாம் பார்வையாளர் கள் கலரியில் அமர்ந்திருக்கும் போதே, இந்தியா இலங்கை க்கு ஒதுக்கிய நிதி விவகாரம் தொடர்பாக தமிழக உறுப்பி னர் ஒருவர் பேசிக் கொண்டிருந்தார்.

தம்பித்துரை எம்.ப
இடம்பெயர்ந்த மக்களை தமது சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்துவதற்காக இலங்கை அரசு திட்டங்களை நடைமுறைப்படுத்திக் கொண்டிரக்கும் போது இந்தியா 500 கோடி ரூபாவை தந்துதவுவதாக குறிப்பிட்டது எமக்கு மகிழ்ச்சியினைத் தந்தது. சபையில் உறுப்பினர் ஒருவருக்கு பேசுவதற்காக நேரம் வழங்கப்பட்டவுடன் அவருக்கு வழங்கப்பட்ட நேரத்துள் அவர் பேசி முடிக்க வேண்டும்.
ஆனால் சபையில் சில உறுப்பினர்கள் தமக்கு வழங்கப்பட்ட நேரத்தை விட கூடுதல் நேரத்தை எடுத்துக் கொள்வது வழமையாம். சபாநாயகரோ அல்லது அவரது ஆசனத்தில் அமர்ந்தவாறு சபையை வழிநடத்தும் உறுப்பினரோ நேரம் முடிந்து விட்டது என்பதை தெரியப்படுத்தி அடுத்த உறுப்பினரை பேச அழைப்பார். லோக் சபாவிலும் எமது நாட்டில் போலவே தமக்குரிய நேரம் முடிவடைந்த பின்னரும் விடாமல் பேசிக் கொண்டிருந்தார். பக்கத்து நாடுகள் தானே!
ஒரு உறுப்பினர் பேச ஆரம்பித்து முடிவடையும் தறுவாயில் நேரம் முடிவடைந்து விட்டது என்பதை அறிவிக்க மணி ஒலிக்கும். இந்த மணி மூன்று முறை ஒலிக்கும். அதுவும் அவர் அமரவில்லையானால் அடுத்த உறுப்பினர் பேச ஆரம்பித்துவிடுவார். எமது நாட்டில் கள அமர்வுகள் 9.30க்கு ஆரம்பமாகின்றன. இந்தியாவில் 11 மணிக்கு ஆரம்பமாகிறது.
இலங்கையில் காலை 9.30 முதல் 10.30 மணிவரை வாய்மொழி விடைக்கான கேள்வி நேரம் நடைபெறுகிறது. அங்கு 11.00 மணி முதல் 12.00 மணி வரை கேள்வி நேரம். இதனை Rush Hour என்றுதான் சொல்ல வேண்டும். கேள்வி நேரம் நேரடியாக லோக்சபா டி.வி. அலைவரிசையில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்பதை குறிப்பிட வேண்டும். (லோக்சபா) மக்களவை என்றால் என்ன அதன் செயற்பாடுகள் என்ன என்பதை முதலில் சொல்லியே ஆகவேண்டும்.
லோக்சபா (மக்களவை)
மக்களவை அல்லது லோக்சபா என்பது இந்திய பாராளுமன்றத்தின் கீழ் அவையையே குறிக்கிறது. மக்களவைக்கு உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
இவர்கள் Member of parliament (MP) என நம்மூரைப் போலவே அழைக்கப்படுகின்றார்கள். இந்த அவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 552 ஒன்றியப் பிரதேச தொகுதிகளையும், நியமன உறுப்பினர்களான ஆங்கிலோ இந்தியர் இருவரையும் உள்ளடக்கிய எண்ணிக்கை இதுவாகும்.
ஆங்கிலோ இந்தியரை பொறுத்தவரை இதுவே இந்த அவையின் அதிகபட்ச அமர்வு எண்ணிக்கையாகும். இருப்பினும் குடியரசுத் தலைவர் இந்த எண்ணிக்கை குறித்து மறுதலிக்கும் பட்சத்தில் இந்த எண்ணிக்கையை கூட்டவோ குறைக்கவோ அரசியல் சட்டத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது.
2009ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் பின்னர் 15வது மக்களவை துவங்கியுள்ளது. இவர்கள் மக்களின் நேரடியான பிரதிநிதிகள். இவர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள். அதன்பிறகு இதன் ஆயுள் மற்றும் பொறுப்புகள் தானாகவே செயலிழந்துவிடும். அவசர நிலைப்பிரகடன காலத்தில் இதன் செயல்பாடுகளை குறிப்பிட்டகாலம் வரை முடக்கப்படலாம் அல்லது ஒரு வருடம் காலம் வரை நீடித்து முடக்கலாம். 14 வது மக்களவை மே 2004ல் துவங்கி 2009 பொதுத் தேர்தல் வரை நடைபெற்றது.
தற்பொழுது 15வது மக்களவை நடைபெறுகின்றது. மக்களவைத் தொகுதிக்கான எல்லைகள் மற்றும் சீரமைவுகள் ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது அல்லது தேர்தல் ஆணையத்தினராலும் மேற்கொள்ளப்படும். இருப்பினும் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரை இந்த சீரமைவுகள் பாதிக்காது. அவர் தேர்தெடுக்கப்பட்டதின்படி அந்த மக்களவையின் ஆயுள் முழுவதும் தொடர்வார்.
உறுப்பினராவதற்கான தகுதிகள்
மக்களவை உறுப்பினராவதற்கு ஒருவர் (ஆண் அல்லது பெண்) இந்தியக் குடிமகனாகவும் வயது 25 அல்லது அதற்கு மேற்பட்டவராகவும், நல்ல மனநிலையில் இருக்க வேண்டும். கடனாளியாக இல்லாதிருத்தல், குற்றமுறை வழக்குகள் அவர் மேல் இல்லாதிருத்தல் வேண்டும். தனித்தொகுதிகளில் (Reserved constituency) போட்டியிட ஆதிதிராவிடர் அல்லது பழங்குடி வகுப்பினராக இருந்தால் மட்டுமே ப

ட்டியிட முடியும்.
மக்களவை, கூட்டத் தொடர்கள் வீ வழக்கமான மக்களவை கூடும் அலுவல் நேரம் காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும் மீண்டும் பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை நடைபெறுகின்றது. வீ ஒவ்வொரு கூட்ட அமர்வின் பொழுதும் முதல் மணி நேரம் கேள்வி நேரமாக எடுத்துக் கொள்ளப்படுகின்றது. உறுப்பினர்கள் அமைச்சர்களின் இலாகா சம்பந்தமான கேள்விகள் கேட்க அனுமதிக்கப்படுகின்றது. இதற்கான பதில்கள் தரும் நாட்களும் கேள்வி நேரத்தின் பொழுதே தெரிவிக்கப்படுகின்றன.
மாநிலங்களவை ராஜ்யசபா போன்றே மக்களவையும் அதற்கு ஈடான அதிகாரங்களை கொண்டுள்ளது.
பணிவிடை மசோதாக்களை மாநிலங்களவையில் (ராஜ்ய சபாவில்) நிறைவேற்ற முடியாது. ஆனால் மக்களவையில் நிறைவேற்ற முடியும்.
இரு அவைகளினாலும் எதிரொலிக்கப் பெறும் சர்ச்சைள் அல்லது முடிவுக்குவரா சர்ச்சைகள், விவாதங்கள் இரு அவைகளும் சேர்ந்தமர்ந்து நடத்தப்பெறும் கூட்டுகூட்டத்தில் முடிவெடுக்கப்படுகின்றது. அச்சமயம் மாநிலங்களவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட மக்களவையில் இரு மடங்கு உறுப்பினர் இருப்பதால் மக்களவை மேலோங்கிய அவையாக செயல்படும்.
மக்களவை ஆண்டுக்கு மூன்று முறை கூட்டப்படும். வீ நிதிநிலை அறிக்கை பட்ஜட் கூட்டத் தொடர்: பெப்ரவரி - மே வீ மழைக்கால கூட்டத்தொடர்: ஜூலை -செப்டெம்பர் வீ குளிர்கால கூட்டத்தொடர்: நவம்பர்-டிசம்பர்
மாநிலங்கள் அவை (ராஜ்ய சபா)
மாநிலங்களவை அல்லது ராஜ்ய சபா இந்திய பாராளுமன்றத்தின் 250 உறுப்பினர்கள் கொண்ட மேலவை ஆகும். இவர்களில் 12 பேர் இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் கலை, இலக்கியம், அறிவியல் போன்ற அவரவர்களுக்குரிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களாக இருப்பர். இந்த 12 பேரைத் தவிர்ந்த மற்றவர்கள் மாநில சட்டமன்றி உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்படுவர்.
இவர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள். மேலவையின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் பதவிக்காலம் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை முடிவடையும். குடியரசுத் துணைத் தலைவர் இந்த அவையின் தலைவராக இருப்பார். மாநிலங்களவை கூட்டங்கள் மக்களவை கூட்டங்களைப் போல் அல்லாமல் தொடர்ச்சியாக நடைபெறும். மக்களவையைப் போல மாநிலங்களவை கலைக்கப்படுவதில்லை. இதன் அதிகாரங்கள் மக்களவைக்கு ஈடானதாகவும் மக்களவைக்கென வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை குறைக்காதனவாகவும் கருதப்படுகின்றது. இரு அவைகளினாலும் எதிரொலிக்கும் சர்ச்சைகளுக்கு இரு அவைகளின் கூட்டுக் கூட்ட அமர்வின் மூலம் தீர்வு காணப்படுகின்றது. இவ்வாறு நடைபெறும் கூட்டுக் கூட்டங்களில் மக்களவை மாநிலங்களவையை விட இரு மங்கு உறுப்பினர்களை கொண்டதாக இருப்பினும், மாநிலங்களவை உண்மையான நடப்பிலுள்ள வீட்டோ அதிகாரங்களை கொண்டிருக்கிறது.
மாநிலங்களவையின் தற்போதைய அலுவல் நிலை ex-officio கூட்டத் தலைவராக இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் அமீத் அன்சாரி பொறுப்பேற்றுள்ளார். துணைக் கூட்டத் தலைவர் அவ்வப்பொழுது நடைபெறும் கூட்டங்களின் தன்மைக்கேற்ப தற்காலிகமாக கூட்டத் தலைவர் இல்லாத பொழுது பொறுப்பேற்கின்றனர். மாநிலங்களவையின் முதல் கூட்டம் மே 13,1952 அன்று துவக்கப்பட்டது.
மாநிலங்களவை உறுப்பினர் அவதற்கான தகுதி
ஒருவர் மாநிலங்களைவை உறுப்பினர் இந்தியக் குடிமகனா கவும் 30 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவராகவும், இருத்தல் வேண்டும். கடனாளியாகவும் குற்றம் புரிந்தவரா கவும் இருக்கவில்லை என்பதை தன் ஒப்புதல் வாக்குமூலத் தில் உறுதி அளிக்க வேண்டும். தனித்தொகுதிகளில் போட்டி யிட அவர் ஆதி திராவிடர் அல்லது பழங்குடியினர் வகுப் பைச் சார்ந்தவராக இருத்தல் அவசியம். அவரே பொதுத் தொகுதிகளிலும் போட்டியிடலாம்.
உறுப்பினர்களின் நியமனங்கள்
உறுப்பினர்கள் மாநில சட்டமன்ற உறுப்பினர்களால் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இம்முறை கனேடிய செனட் மற்றும் ஜெர்மனி பந்தர்ஸ்ரேட் ஆகிய மன்றங்களின் தேர்ந்தெடுக்கும் முறைகளின்படி இங்கும் பின்பற்றப்படுகின்றது. இதன் இருக்கைகள் மாநிலங்க ளின் பிரதிநிதித்துவத்திற்கேற்றால்போல் அதன் மக்கள் தொகை, பரப்பளவு இவற்றின் அடிப்படையில் ஒதுக்கப்படு கின்றன. பெரிய மாநிலங்களுக்கு அதிக இடங்களும் சிறிய மாநிலங்களுக்கு குறைவான இருக்கைகளும் சரிசம பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் ஒதுக்கப்படுகிறது.
தேர்ந்தெடுக்கப்படும் ஒரு உறுப்பினர் அவர் பதவி விலகி னாலன்றி வேறு ஒருவரை அப்பதவியில் நியமிக்க முடியாது.
மக்களவைத் தலைவரின் அதிகாரங்கள்
மக்களவைத் தலைவரே பேரவையே நடத்துபவர். கண்காணிப்பதும் மற்றும் பேரவைகளின் அலுவல்களை கவனிப்பரும் அவரே. மசோதாவின் தன்மைகளை ஆராய்ந்து (பண விடை மசோதா மற்றும் பண விடையில்லா மசோதா) அதன்படி தாக்கல் செய்ய அனுமதிக்கின்றார். பேரவையை அதன் மாண்பு குறையாமல், இறையாண்மை குறையாமல், ஒழுக்கத்துடன் நடைபெறக் கடப்பாடு கொண்டுள்ளார்.
தீர்மானங்களை அவரின் அனுமதியின்றித் தாக்கல் செய்யமுடியாது. நம்பிக்கையில்லாத் தீர்மானம், ஒத்திவைப்புத் தீர்மானம், கண்டனத் தீர்மானம் மற்றும் கவன ஈர்ப்புத் தீர்மானம் போன்ற தீர்மானங்களை அனுமதிக்கின்றார். அவரின் இசைவினால் விவாதங்கள் ஏற்கப்படுகின்ற மற்றும் தள்ளுபடி செய்யப்படுகின்றன.