புதுடில்லி வியாபாரிகளை சமாளிக்க புதுத் திறமை வேண்டும்சென்னையில் தியாகராயநகர், பாண்டிபஜார், மண்ணடி போன்ற ஷொப்பிங் இடங்களைப் போன்றவைதான் டில்லியில் அமைந்துள்ள சரோஜினி நகர், பாலிகா பஸார், கொரல்பார் ஆகிய இடங்கள். இங்கே ஏராளமான
பொருட்கள் கொட்டிக் கிடக்கின்றன. பெண்கள் அணிகளைப் பார்த்தால் தலை கிறுகிறுத்துப் போகும். அதே சமயம் விலையைக் கேட்டால் மயக்கமே போட்டு விழுந்துவிடுவீர்கள்.
புதுடில்லிக்கு புறப்படுவதற்கு முன்னர் ஏற்கனவே அனுபவம் பெற்ற நண்பர் ஒருவர் புதுடில்லி பற்றிய சில சூத்திரங்களைக் காதில் ஓதி வைத்தார். பொருட்களை வாங்கும் போது அவர்கள் சொல்லும் விலையைக் கொடுத்து விடாதீர்கள். பொருளுடன் சம்பந்தமே இல்லாத ஒரு யானை விலை குதிரை விலையைக் கூறிபேரத்தை ஆரம்பிப்பார்கள். ஏனெனில் உங்கள் உடைநடை பாவனையிலேயே நீங்கள் வெளிநாட்டில் அல்லது வெளி மாநிலத்தில் இருந்துவந்த ஏமாளி என்பதைக் கண்டுபிடித்துவிடுவார்கள். நீங்கள் ஒரு விலையைக் கூறி
விடாப்பிடியாக நின்றால் அந்த விலைக்கே கொடுத்துவிடுவார்கள். ஆனால் அவர்கள் உயர்மட்ட விலையைக் கூறும் போது நீங்கள் அடிமட்ட விலையைக் குறிப்பிடுங்கள் என்று அவர் ஒரு அற்புதமான விஷயத்தைச் சொல்லி வைத்தார்.
பாலிகா பஸாரில் இது உண்யைமானது. தள்ளிச் செல்லக்கூடிய லக்கேஜ் ஒன்றைப் பார்த்து பரவசப்பட்டு விலை கேட்டேன். 1200 ருபா என்றார் கடைக்கார். நம் கரன்ஸியில் மூவாயிரம் ரூபா வரும். முதலில் விலைகுறை க்க மறுத்தவர். கடுமையான பேரத்தின் பின்னர் படிந்து வந்தார். கடைசியாக 500 ரூபாவுக்கு தரச் சம்மதித்தார்.

சரோஜினி நகர்
பரபரப்பான வீதி
காலணிகளைப் பார்க்கும் போது ஆசைவர, விலை கேட்டேன். ஆயிரத்து எழுநூறு ரூபா என்றார். பேரம் தொடங்கியது. ஒரு கட்டத்தில் வேண்டாம் என்று வெளியே வந்துவிட்டேன். கடைக்காரர் வெளியே வந்து கைகளைப் பிடித்துக் கொண்டார்கள். ஹரோ சஹேப், ஹரே சாஹேப் எனக் கெஞ்சத் தொடங்கினார். இறுதியில் எனக்கு ஏற்ற மாதிரி 300 ரூபாவுக்கு விலை மடிந்தது. ஒரு சன்கிளாஸ் விலை 700 ரூபா. இருவரும் வியாபார சண்டையை உக்கிரமாக நடத்தி முடித்த போது 100 ரூபாவுக்கு அது என் கைக்கு வந்தது. இப்படி எல்லாம் இலங்கையிலோ சென்னையிலோ விலைபேச முடியாது. சும்மா போங்க சார்... கெளம்பு... கெளம்பு என்று சொல்லி விடுவார்கள்.
முகத்தில் அறைந்த மாதிரி. ஆனால் இப்பிராந்தியத்தின் வொஷிங்டன் மாதிரித் திகழும் புதுடில்லியில் இதுவெல்லாம் சாத்தியம். என்ன விலை, என்ன
இலாப சத விதம் என்பதெல் லாம் எமக்குப் புரியாத புதிர். நிச்சயமாக அந்த ‘பொளோ ரொய்ட்’ சன்கிளாசை நஷ்டத் துக்கு அவர் தந்திருக்க மாட்டார். 100 ரூபாவிலும் அவருக்கு இலாபம் இருக்கும். அப்படியானால் கொள்விலை என்னவாக இருக்கும்? ஏன் இப்படி ஒரு கொள்ளை விலை அணுகுமுறையை இவ் வியா பாரிகள் கடைபிடிக்கிறார்கள்? புதுடில்லி பண்டிதர்களைப் போலத்தான் இந்த மாதிரி விஷயங்களும் நமக்குப் புரிவதில்லை.
சரி டில்லியில் பத்திரிகை யாளர்களுக்கு என்ன வேலை? எமது வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமதான் எங்களை- பாராளுமன்ற ஊடகவியலாளர்களாக- டில்லிக்கு அனுப்பி வைத்தார்.
பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் அமைச்சருடன் நடத்தப்பட்ட கலந்துரையாட லின் போது பாராளுமன்ற ஊடகவியலாளர்களுக்கு சார்க் நாடுகளின் பாராளுமன்ற நடைமுறைகள் விவகாரங்கள் தொடர்பான அறிவைப் பெற்றுக் கொண்டுக்க வேண்டும் என்றும் கட்டம் கட்டமாக ஆறு பேர் வீதம் தெரிவு செய்து அனுப்புவது என்ற ஆலோசனையையும் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம முன்னெடுத்தார்.
இலங்கையின் பாராளுமன்ற அமைச்சர் முன்வைத்த ஆலோசனையை உடனடியாக நடைமுறைப்படுத்தும் நோக்கில் 6 பேர் தெரிவு செய்யப்பட்டனர்.
இந்திய பாராளுமன்றத்தின் அமர்வுகள் மற்றும் பாராளு மன்ற கற்கை நெறிகள், பயிற்சிகளுக்கான பணியகத்தின் செயற்பாடுகள் குறித்து நேரடியாக சென்று அறியும் வாய்ப்பை வெளிநாட்டமைச்சர் ரோஹித்த போகொல்லாகம முதல்முறை யாக ஏற்படுத்திக் கொடுத்தார். பயண ஏற்பாடுகளையும் செய்திருந்தார். இதன்படி ஆறுபேர் கொண்ட முதலாவது குழு கடந்த 12ஆம் திகதி புதுடில்லி சென்றது.
12ஆம் திகதி பிற்பகல் 3.00 மணியளவில் எம்மை ஏற்றிச் சென்ற ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமானம் புதுடில்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.
விமான நிலையத்தின் பயணிகள் வருகைப் பகுதியில் வைத்து புதுடில்லியிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் முதற் செயலாளர் சுகீஸ்வர குணரட்ன மற்றும் திருமதி ஜானகி பர்னாண்டோ ஆகியோர் எம்மை வரவேற்றனர்.
எம்மோடு வந்தவர்களில் இரண்டு பேரைத்தவிர ஏனைய நான்கு பேரும் புதுடில்லிக்கு முதற் தடவையாகவே செல்கின்றவர்களாக இருந்தோம்.
டில்லியில் ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையில் கோடைகாலமாக இருக்கும். நாம் ஜூலை 12ஆம் திகதி பேய்ச் சேர்ந்ததால் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தவுடனேயே அதிகளவு வெப்பத்தை உணர முடிந்தது. டில்லியில் குளிரும் சரி வெப்பமும் சரி தூக்கலாகத்தான் இருக்கும். கடுங்குளிர் அல்லது கடுங்கோடை!
முதல் முறையாக செல்வதால் புதுடில்லியைப் பற்றி அறிய ஆவலாய் இருந்தோம். டில்லி தேசிய தலைநகரப் பகுதி 1,484 ச.கி.மீ. (573 சதுர மைல்) பரப்பளவு கொண்டது. இதில் 783 ச.கி.மீ. (302 சதுர மைல்) பரப்பளவு கொண்ட பகுதி நாட்டுப்புறப் பகுதியாகவும் 700 ச.கி.மீ (270 சதுர மைல்) பகுதி நகர்ப்புறப் பகுதியாகவும் உள்ளது. டில்லி தேசிய தலைநகரப் பகுதியின் மிகக் கூடிய நீளம் 51.9 கி.மீ. (32 மைல்), அகலம் 48.48 கி.மீ. (30 மைல்) இப் பகுதியில் மூன்று உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இவை டில்லி முனிசிப்பல் கார்ப்பரே சன் (1,397.3 ச.கி.மீ. அல்லது 540 சதுர மைல்) புதுடில்லி முனிசிப்பல் கமிட்டி (42.7 ச.கி.மீ அல்லது 16 சதுர மைல்) டில்லி கன்டோன்மென்ட் சபை (43 ச.கி.மீ அல்லது 17 சதுர மைல்) என்பனவாகும்.
டில்லி வட இந்தியாவில் கிழக்கில் உத்தரபிரதேசத்தையும், மேற்கு, வடக்கு, தெற்குத் திசைகளில் ஹரியானாவையும், எல்லைகளாகக் கொண்டுள்ளது. டில்லி ஏறத்தாள முழுமையாக கங்கைச் சமவெளியில் அமைந்துள்ளது. டில்லியின் முக்கியமான இரண்டு புவியியல் அம்சங்கள் யமுனை வெள்ளச் சமவெளி யும் டில்லி முகடும் ஆகும். தாழ்நில யமுனை வெள்ளச் சமவெளி வேளாண்மைக்கு உகந்த மண்டப மண்ணை வழங்குகிறது. எனினும் இச்சமவெளி தொடர்ச்சியான வெள்ளப் பெருக்குகளுக்கு உள்ளாகிறது. 318 மீட்டர் (1.043 அடி) வரையான உயரத்தை எட்டும் முகடு, இப் பகுதியின் மிக முக்கியமான அம்வமாக விளங்குகின்றது. இது தெற்கே ஆரவல்லி மலைத் தொடரில் இருந்து தொடங்கி நகரின் மேற்கு, வடகிழக்கு, வட மேற்குப் பகுதிகளைச் சுற்றிச் செல்கிறது. இந்துக்களால் புனிதமான தாகக் கருதப்படும் யமுனை ஆறு மட்டுமே டில்லி ஊடாகச் செல்லும் முக்கியமான ஒரே ஆறு ஆகும். புதுடில்லி உட்பட்ட நகரின் பெரும்பாலான பகுதிகள் யமுனையின் மேற்குப் பகுதியிலேயே அமைந்துள்ளன. நகர்ப்புறப் பகுதியான சாஹ்தாரா ஆற்றின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது.
டில்லி இந்தியாவில் உள்ள இரண்டாம் மிகப் பெரிய மாநகரமாகும். இது தலைநகரப் பகுதியில் உள்ள மூன்று நகரங்களுள் ஒன்றாகும். மற்ற இரண்டு நகரங்கள் புதுடில்லி மற்றும் டில்லி கண்டோன்மென்ட் ஆகியன வாகும். இத் தேசிய தலைநகரப் பகுதி 11 மில்லியன் மக்கள் தொகையுடன் உலகின் எட்டாவது பெரிய மக்கள் தொகையைக் கொண்ட நகரமாகவும் விளங்குகிறது. இது மத்திய அரசினால் நிர்வாகம் செய்யப்படுகின்றது.
1639 ஆம் ஆண்டில், முகலாயப் பேரரசர் சாஜஹான் மதிலால் சூழப்பட்ட நகரமொன்றை இங்கே அமைத்தார். இது 1649 தொடக்கம் 1857 ஆம் ஆண்டு வரை முகலாயப் பேரரசின் தலைநகரமாக விளங்கியது. 18ஆம் 19 ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியின் கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர், கல்கத்தாவே இன்றைய கொல்கொத்தாவாக அவர்களது தலைமையிடமாக இருந்தது.
கம்பனியின் ஆட்சியிலும் பின்னர் சில காலம் பிரித்தானிய அரசின் கீழும் இந்நிலை நீடித்தது. 1911ஆம் ஆண்டில் ஐந்தாம் ஜோர்ர்ஜ் மன்னர் தலைநகரத்தை டில்லிக்கே மாற்றும் அறிவிப்பை விடுத்தார். 1920 களில் பழைய டில்லி நகருக்குத் தேற்கே புதுடில்லி எனப் பெயர்பெற்ற புதிய தலைநகரம் அமைக்கப்பட்டது. 1947ல் இந்தியா விடுதலை பெற்ற பின்னர் இதுவே தலைநகரமாகவும், அரசின் இருப்பிடமாகவும் அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளிலுமிருந்து மக்கள் குடிபெயர்ந்ததால் டில்லி ஒரு பல்லின மக்கள் வாழும் நகரமானது. இங்கு வாழ்வோரின் உயர்ந்த சராசரி வருமானமும் டில்லியின் விரைவான வளர்ச்சி, நகராக்கம் என்பனவும் நகரைப் பெருமளவு மாற்றியமைத்தன. இன்று இது இந்தியாவின் முக்கியமான பண்பாட்டு , அரசியல், வணிக மையமாக விளங்குகின்றது. (தொடரும்)
முகத்தில் அறைந்த மாதிரி. ஆனால் இப்பிராந்தியத்தின் வொஷிங்டன் மாதிரித் திகழும் புதுடில்லியில் இதுவெல்லாம் சாத்தியம். என்ன விலை, என்ன
இலாப சத விதம் என்பதெல் லாம் எமக்குப் புரியாத புதிர். நிச்சயமாக அந்த ‘பொளோ ரொய்ட்’ சன்கிளாசை நஷ்டத் துக்கு அவர் தந்திருக்க மாட்டார். 100 ரூபாவிலும் அவருக்கு இலாபம் இருக்கும். அப்படியானால் கொள்விலை என்னவாக இருக்கும்? ஏன் இப்படி ஒரு கொள்ளை விலை அணுகுமுறையை இவ் வியா பாரிகள் கடைபிடிக்கிறார்கள்? புதுடில்லி பண்டிதர்களைப் போலத்தான் இந்த மாதிரி விஷயங்களும் நமக்குப் புரிவதில்லை.சரி டில்லியில் பத்திரிகை யாளர்களுக்கு என்ன வேலை? எமது வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமதான் எங்களை- பாராளுமன்ற ஊடகவியலாளர்களாக- டில்லிக்கு அனுப்பி வைத்தார்.
பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் அமைச்சருடன் நடத்தப்பட்ட கலந்துரையாட லின் போது பாராளுமன்ற ஊடகவியலாளர்களுக்கு சார்க் நாடுகளின் பாராளுமன்ற நடைமுறைகள் விவகாரங்கள் தொடர்பான அறிவைப் பெற்றுக் கொண்டுக்க வேண்டும் என்றும் கட்டம் கட்டமாக ஆறு பேர் வீதம் தெரிவு செய்து அனுப்புவது என்ற ஆலோசனையையும் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம முன்னெடுத்தார்.
இலங்கையின் பாராளுமன்ற அமைச்சர் முன்வைத்த ஆலோசனையை உடனடியாக நடைமுறைப்படுத்தும் நோக்கில் 6 பேர் தெரிவு செய்யப்பட்டனர்.
இந்திய பாராளுமன்றத்தின் அமர்வுகள் மற்றும் பாராளு மன்ற கற்கை நெறிகள், பயிற்சிகளுக்கான பணியகத்தின் செயற்பாடுகள் குறித்து நேரடியாக சென்று அறியும் வாய்ப்பை வெளிநாட்டமைச்சர் ரோஹித்த போகொல்லாகம முதல்முறை யாக ஏற்படுத்திக் கொடுத்தார். பயண ஏற்பாடுகளையும் செய்திருந்தார். இதன்படி ஆறுபேர் கொண்ட முதலாவது குழு கடந்த 12ஆம் திகதி புதுடில்லி சென்றது.
12ஆம் திகதி பிற்பகல் 3.00 மணியளவில் எம்மை ஏற்றிச் சென்ற ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமானம் புதுடில்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.
விமான நிலையத்தின் பயணிகள் வருகைப் பகுதியில் வைத்து புதுடில்லியிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் முதற் செயலாளர் சுகீஸ்வர குணரட்ன மற்றும் திருமதி ஜானகி பர்னாண்டோ ஆகியோர் எம்மை வரவேற்றனர்.
எம்மோடு வந்தவர்களில் இரண்டு பேரைத்தவிர ஏனைய நான்கு பேரும் புதுடில்லிக்கு முதற் தடவையாகவே செல்கின்றவர்களாக இருந்தோம்.
டில்லியில் ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையில் கோடைகாலமாக இருக்கும். நாம் ஜூலை 12ஆம் திகதி பேய்ச் சேர்ந்ததால் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தவுடனேயே அதிகளவு வெப்பத்தை உணர முடிந்தது. டில்லியில் குளிரும் சரி வெப்பமும் சரி தூக்கலாகத்தான் இருக்கும். கடுங்குளிர் அல்லது கடுங்கோடை!
முதல் முறையாக செல்வதால் புதுடில்லியைப் பற்றி அறிய ஆவலாய் இருந்தோம். டில்லி தேசிய தலைநகரப் பகுதி 1,484 ச.கி.மீ. (573 சதுர மைல்) பரப்பளவு கொண்டது. இதில் 783 ச.கி.மீ. (302 சதுர மைல்) பரப்பளவு கொண்ட பகுதி நாட்டுப்புறப் பகுதியாகவும் 700 ச.கி.மீ (270 சதுர மைல்) பகுதி நகர்ப்புறப் பகுதியாகவும் உள்ளது. டில்லி தேசிய தலைநகரப் பகுதியின் மிகக் கூடிய நீளம் 51.9 கி.மீ. (32 மைல்), அகலம் 48.48 கி.மீ. (30 மைல்) இப் பகுதியில் மூன்று உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இவை டில்லி முனிசிப்பல் கார்ப்பரே சன் (1,397.3 ச.கி.மீ. அல்லது 540 சதுர மைல்) புதுடில்லி முனிசிப்பல் கமிட்டி (42.7 ச.கி.மீ அல்லது 16 சதுர மைல்) டில்லி கன்டோன்மென்ட் சபை (43 ச.கி.மீ அல்லது 17 சதுர மைல்) என்பனவாகும்.
டில்லி வட இந்தியாவில் கிழக்கில் உத்தரபிரதேசத்தையும், மேற்கு, வடக்கு, தெற்குத் திசைகளில் ஹரியானாவையும், எல்லைகளாகக் கொண்டுள்ளது. டில்லி ஏறத்தாள முழுமையாக கங்கைச் சமவெளியில் அமைந்துள்ளது. டில்லியின் முக்கியமான இரண்டு புவியியல் அம்சங்கள் யமுனை வெள்ளச் சமவெளி யும் டில்லி முகடும் ஆகும். தாழ்நில யமுனை வெள்ளச் சமவெளி வேளாண்மைக்கு உகந்த மண்டப மண்ணை வழங்குகிறது. எனினும் இச்சமவெளி தொடர்ச்சியான வெள்ளப் பெருக்குகளுக்கு உள்ளாகிறது. 318 மீட்டர் (1.043 அடி) வரையான உயரத்தை எட்டும் முகடு, இப் பகுதியின் மிக முக்கியமான அம்வமாக விளங்குகின்றது. இது தெற்கே ஆரவல்லி மலைத் தொடரில் இருந்து தொடங்கி நகரின் மேற்கு, வடகிழக்கு, வட மேற்குப் பகுதிகளைச் சுற்றிச் செல்கிறது. இந்துக்களால் புனிதமான தாகக் கருதப்படும் யமுனை ஆறு மட்டுமே டில்லி ஊடாகச் செல்லும் முக்கியமான ஒரே ஆறு ஆகும். புதுடில்லி உட்பட்ட நகரின் பெரும்பாலான பகுதிகள் யமுனையின் மேற்குப் பகுதியிலேயே அமைந்துள்ளன. நகர்ப்புறப் பகுதியான சாஹ்தாரா ஆற்றின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது.
டில்லி இந்தியாவில் உள்ள இரண்டாம் மிகப் பெரிய மாநகரமாகும். இது தலைநகரப் பகுதியில் உள்ள மூன்று நகரங்களுள் ஒன்றாகும். மற்ற இரண்டு நகரங்கள் புதுடில்லி மற்றும் டில்லி கண்டோன்மென்ட் ஆகியன வாகும். இத் தேசிய தலைநகரப் பகுதி 11 மில்லியன் மக்கள் தொகையுடன் உலகின் எட்டாவது பெரிய மக்கள் தொகையைக் கொண்ட நகரமாகவும் விளங்குகிறது. இது மத்திய அரசினால் நிர்வாகம் செய்யப்படுகின்றது.
1639 ஆம் ஆண்டில், முகலாயப் பேரரசர் சாஜஹான் மதிலால் சூழப்பட்ட நகரமொன்றை இங்கே அமைத்தார். இது 1649 தொடக்கம் 1857 ஆம் ஆண்டு வரை முகலாயப் பேரரசின் தலைநகரமாக விளங்கியது. 18ஆம் 19 ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியின் கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர், கல்கத்தாவே இன்றைய கொல்கொத்தாவாக அவர்களது தலைமையிடமாக இருந்தது.
கம்பனியின் ஆட்சியிலும் பின்னர் சில காலம் பிரித்தானிய அரசின் கீழும் இந்நிலை நீடித்தது. 1911ஆம் ஆண்டில் ஐந்தாம் ஜோர்ர்ஜ் மன்னர் தலைநகரத்தை டில்லிக்கே மாற்றும் அறிவிப்பை விடுத்தார். 1920 களில் பழைய டில்லி நகருக்குத் தேற்கே புதுடில்லி எனப் பெயர்பெற்ற புதிய தலைநகரம் அமைக்கப்பட்டது. 1947ல் இந்தியா விடுதலை பெற்ற பின்னர் இதுவே தலைநகரமாகவும், அரசின் இருப்பிடமாகவும் அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளிலுமிருந்து மக்கள் குடிபெயர்ந்ததால் டில்லி ஒரு பல்லின மக்கள் வாழும் நகரமானது. இங்கு வாழ்வோரின் உயர்ந்த சராசரி வருமானமும் டில்லியின் விரைவான வளர்ச்சி, நகராக்கம் என்பனவும் நகரைப் பெருமளவு மாற்றியமைத்தன. இன்று இது இந்தியாவின் முக்கியமான பண்பாட்டு , அரசியல், வணிக மையமாக விளங்குகின்றது. (தொடரும்)
No comments:
Post a Comment